Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news வைகுண்டவாசகப் பெருமாள் கோவிலில் ... ஆண்கள் மட்டுமே கொண்டாடிய விநோத வழிபாடு! ஆண்கள் மட்டுமே கொண்டாடிய விநோத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பசி போக்கும் அற்புத வணக்கம்: பக்ரீத் திருநாள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

06 அக்
2014
10:10

ஹஜ்ஜூ பெருநாளன்று, பிராணிகளை அறுத்துப்பலியிடுவதே, ’குர்பானி’ என்று சொல்லப்படுகிறது. நபி இபுராஹிம் (அலை) அவர்களின், தியாகத்தை முன் மாதிரியாக கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்இதனைச் செய்துள்ளார்கள். அல்லாஹ்வும் தன் திருமறையில், இதை ஒரு வணக்கமாக அங்கீகரித்துள்ளான். ’(அவைகளுக்கு நன்றி செலுத்துவதற்காக) நீங்கள் உங்களது இறைவனை தொழுது, குர்பானி (செய்து) கொடுத்து வாருங்கள்’ என்று அல்லாஹ் கூறுகிறான். (அல்குர்ஆன் 108:2)”ஹஜ் பெருநாள் தினத்தில், அறுத்துப்பலியிடுவதை விடச் சிறந்த அமலை, ஒருவன் செய்து விட முடியாது. அந்தப்பிராணியிலிருந்து சிந்துகின்ற ரத்தம், அல்லாஹ்விடம் மிகவும் உயர்ந்த மதிப்பைப் பெற்றதாகும். அதனை சிறந்த முறையில் அறுங்கள்,” என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.மகத்தான பலி என்றால், சினம் கொண்ட கடவுளின் கோபத்தை தணிப்பதற்கு, கொடுக்கப்படும் பலி என்றோ அல்லது இந்த லாபகர உலகில், நாடியது நிறைவேற வேண்டி, கடவுளை களிப்பூட்டவோ செய்யப்பட்ட பலி அல்ல என்பது தான். முஸ்லிம் என்றால்,
இறைவனுக்கு முற்றிலும் வழிபடுபவர் என்று பொருள். எனவே, இறைவனுக்கு முற்றிலும் வழிபட்ட, ஒரு உண்மை முஸ்லிமின் உலகம் போற்ற வேண்டிய உன்னத தியாகமே, இந்த மகத்தான பலியாகும். குர்பான் எனப்படுவது, புறச்சடங்குகளை மட்டும் குறிப்பிடுவது ஆகாது.

உள்ளத்தில் ஏற்படும் கீழான இச்சைகளை வேரறுத்து, ஊன் உருக, உள்ளம் உருக இறைவனுக்கு முற்றிலும் வழிபடுவதையே குறிக்கும்.இதைத் தான் இறைவன், தனது அற்புத திருமறையில், (இவ்வாறு குர்பான் செய்த போதினும்), அதன் மாமிசமோ, அதன் ரத்தமோ, இறைவனை அடைந்து விடுவதுஇல்லை. உங்களுடைய இறைஅச்சமே, அவனை அடையும் என்று மிக அற்புதமாக விளக்குகின்றான்.

“குர்பானி கொடுக்கப்பட்ட பிராணியின் இறைச்சியை நீங்களும் உண்ணுங்கள். உறவினர்கள், ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள். சேமித்தும் வைத்துக் கொள்ளுங்கள்,” என்று கூறிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஏழைகளின் பசியைப் போக்கும், ஓர் அற்புத வணக்கமாகவும் இதை காட்டித் தந்தார்கள். இபுராஹிம் நபியவர்களின், மாபெரும் தியாகத்தை நினைவு கூர்வது மட்டுமின்றி, தியாகத்தை நெஞ்சில் நிறுத்திடவும், தியாகம் நிலைத்திடவும் வல்ல அல்லாஹ்விடம் துவா செய்வோம்.“குர்பானியின் இறைச்சியோ, அவற்றின் ரத்தமோ அல்லாஹ்விடம் போய் சேர்வதில்லை. எனினும் உங்களின் இறையச்சம் தான், அவனைச் சென்றடைகிறது,” என அல்லாஹ், தனது அருள் மறை திருக்குர்ஆனில் கூறியிருக்கிறான்.

அதன்படி, இறையச்சமே, இதன் பிரதான அடிப்படை நோக்கம் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். எல்லாம் வல்ல இறைவன் நாம் கொடுக்கும் குர்பானியை, அவனுடைய பொருத்தத்திற்குரியதாக, தியாக சிந்தனையை, செயல்பூர்வமாக வெளிப்படுத்தக் கூடியதாக அமைத்து, அதை அங்கீகரித்து அருள்புரிவானாக!

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar