Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news விருத்தகிரீஸ்வரர் கோவில் கோபுரம் ... அகரம் முத்தாலம்மன் கோயில் விழா! அகரம் முத்தாலம்மன் கோயில் விழா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆலமரத்தில் வவ்வால்கள்: பட்டாசு வெடிக்காத கிராம மக்கள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

20 அக்
2014
11:10

மணப்பாறை: மணப்பாறை அருகே, ஆலமரத்தில் கூட்டமாக வாழும் வவ்வால்கள் கலைந்து செல்லாமல் இருக்க, இரண்டு கிராம மக்கள், பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ளது சாம்பட்டி கிராமம். இங்கு, நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவ்வூரின் அருகில், பல நுாற்றாண்டு பழைமை வாய்ந்த ஆரியபெருமாள் கோவில் உள்ளது. 50 ஆண்டுக்களுக்கும் மேலாக இங்கு வழிபாடு நடக்கவில்லை. இக்கோவில் மண்டபத்தில் உள்ள ஆலமரத்தில், பழம் தின்னும் வவ்வால்கள் கூட்டம், கூட்டமாக வந்து தங்கியுள்ளன. வவ்வால் கூட்டம் வந்த பின், அப்பகுதியில் மழை நன்றாக பெய்ததுடன், விவசாயம் செழிப்படைந்தது.இதனால், ஆரியபெருமாளே வவ்வாலாக வந்து, ஊரை பாதுகாப்பதாக, அப்பகுதி மக்களிடையே நம்பிக்கை ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதி மக்கள், வவ்வாலை வேட்டையாடாமலும், வேட்டையாட வருபவர்களையும் தடுத்தும் வந்தனர்.தற்போது, மரத்தில், 5,000க்கும் அதிகமான வவ்வால்கள் தங்குகின்றன.

தீபாவளி மற்றும் விசேஷ நாட்களில், பட்டாசு வெடித்தால், வவ்வால்கள் பயந்து ஓடி விடும் எனக் கருதும் பொதுமக்கள், தீபாவளிக்குக்கூட, பட்டாசுகள் வெடிப்பதில்லை. உறவினர்களுக்கு இனிப்பு வழங்கி, தீபாவளியை கொண்டாடி முடிக்கின்றனர்.பத்து ஆண்டுகளாக, பட்டாசு சத்தமே, இந்த ஊரில் கேட்டதில்லை என, இக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.அதேபோல், மணப்பாறை அருகே அமயபுரம் பஞ்சாயத்து தோப்புப்பட்டியில், பழைமை வாய்ந்த முனியப்பன் கோவில் வளாகத்தில் உள்ள ஆலமரங்களில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக, வவ்வால்கள் கூட்டமாக தங்குகின்றன. இப்பகுதியிலும் பொதுமக்கள் பட்டாசு வெடிப்பதில்லை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar