புதுச்சேரி : கோவில்களில், அமாவாசை நோன்பு வழிபாடு நேற்று நடந்தது. தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. அன்றைய தினமே, பலர் தங்களது வழக்கப்படி, தீபாவளி நோன்பு எடுத்தனர்.இதைதொடர்ந்து, அமாவாசை நோன்பு வழிபாடு, கோவில்களில் நேற்று நடந்தது. புதிய மண் பானையில், பூஜைப் பொருட்களுடன் பெண்கள் நோன்பு வழிபாடு நடத்தினர். நோன்பு காரணமாக, பெரிய மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் வியாபாரம் களை கட்டியது. மக்கள் கூட்டத்தால், மார்க்கெட் நிரம்பி வழிந்தது.