வைத்தியநாதசுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24அக் 2014 01:10
ஸ்ரீவில்லிபுத்தூர் :ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலில் கந்தசஷ்டிவிழா இன்று துவங்குகிறது.இதையொட்டி காலையில் அபிஷேகம், அலங்காரம், பஜனை நடக்கிறது. விழாவின் முக்கிய நாளான 29ம் தேதி கந்த சஷ்டி விழா நடக்கிறது. இதையொட்டி காலையில் சண்முகர், வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியருக்கு அபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாராதனை நடக்கிறது. மாலை 5 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.