மாமல்லபுரம் : மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், நேற்று, பூதத்தாழ்வார் அவதார உற்சவம் துவங்கியது.இதையொட்டி, அவருக்கு சிறப்பு அபிஷேகத்துடன், திருமஞ்சனம் செய்யப்பட்டது.அதை தொடர்ந்து, நாலாயிர திவ்விய பிரபந்தம் மற்றும் திருப்பாவை சாற்றுமறை சேவைகளுக்குபின், வீதியுலா, திருவாய்மொழி சேவை என, நடந்தது. 31ம் தேதி, காலை 8:30 மணிக்கு, திருத்தேரில் பூதத்தாழ்வார் வீதியுலா நடைபெறும்.