பதிவு செய்த நாள்
24
அக்
2014
01:10
ஆர்.கே.பேட்டை : வாடாவள்ளி உடனுறை விசாலீஸ்வரர் கோவிலில், நேற்று, கேதார கவுரி நோன்பை ஒட்டி, திரளான பெண்கள் குவிந்தனர். அம்மனை வழிபட்டு, நோன்பு கயிறு அணிந்தனர். ஆர்.கே.பேட்டை விசாலீஸ்வரர் கோவிலில், நேற்று காலை முதல், பெண்கள் அவரவர் குல வழக்கப்படி, அம்மனுக்கும், விநாயகருக்கும் நோன்பு படையல் வைத்தனர்.இதில், 21 பலகாரம், 21 மஞ்சள், 21 வெற்றிலை, பாக்கு என, படைத்து, நோன்பு மேற்கொண்டனர். திரளான பெண்கள், தங்கள் குடும்பத்தினருடன் வந்து, பிரசாதமாக வழங்கப்பட்ட நோன்பு கயிறை அணிந்து, சுவாமியை வழிபட்டனர். இதேபோல், பொதட்டூர்பேட்டை அகத்தீஸ்வரர் கோவில், அத்திமாஞ்சேரிபேட்டை கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.