Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முருகன் அவதாரம்! திருப்பரங்குன்றத்தில்.. அரோகரா கோஷத்துடன்  சூரசம்ஹாரம்! திருப்பரங்குன்றத்தில்.. அரோகரா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரோகரா கோஷத்துடன்.. திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் கோலாகலம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

29 அக்
2014
06:10

தூத்துக்குடி: அரோகரா கோஷத்துடன், திருச்செந்தூர் கடற்கரையில் சூரனை, சுவாமி ஜெயந்திநாதர் சம்ஹாரம் செய்தார். திருச்செந்தூர் முருகன் கோயில் கந்தசஷ்டி விழா  அக்.,24 ல் யாகசாலை பூஜையுடன் துவங்கியது. அன்று முதல் பக்தர்கள் கடலில் புனித நீராடி பச்சை ஆடை அணிந்து சஷ்டி  விரதம் மேற்கொண்டனர்.

தினமும் காலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.  மதியம் 12 மணிக்கு யாகசாலையில் எழுந்தருளும் சுவாமி ஜெயந்தி நாதருக்கு சிறப்பு அபிஷேக ஆராதணை நடந்தது. 6ம் நாளான காலை 6 மணிக்கு  யாகசாலை பூஜை துவங்கியது. மதியம் 12 மணிக்கு தீபாரதணை நடந்தது. 12.45 க்கு தங்கசப்பரத்தில் சுவாமி ஜெயந்தி நாதர் யாகசாலையில் எழுந் தருளி,வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல்களுடன்,மேள தாளத்துடன் சண்முகவிலாசம் வந்தடைந்தார். மதியம் 2 மணிக்கு திருவாவடுதுறை  ஆதீன சஷ்டி மண்டபத்தில், சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேக, அலங்காரம் நடந்தது.

கடற்கரையில் வதம்: மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்திற்காக கடற்கரைக்கு எழுந்தருளினார். கஜமுகத்துடன் சூரபத்மன் சுவாமியை மூன்று முறை வலம் வந்து போரிட்டான். ஜெயந்தி நாதர் அவனது தலையை மாலை 5.07 க்கு கொய்தார். பின் சிங்கமுகத்துடன் வலம் வந்து போரிட்ட சூரனின் தலையை மாலை 5.27க்கு கொய்தார். பின் சுய ரூபத்துடன் போரிட்ட சூரனின் தலையை மாலை 5.47க்கு துண்டித்தார்.

லட்சக்கணக்கான பக்தர்கள்: இந் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் திரண்டு ‘வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா’என கோஷம் எழுப்பினர். அதன் பின்பு சுவாமி சந்தோஷ மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அலங்காரம், தீபாரதணை நடந்தது. கிரி பிரகாரம் வலம் வந்து சுவாமி கோயில் வந்து சேர்ந்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar