Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேலூர் பெயர் காரணம் தெரியுமா? சத்தியத்தை மீறினால் என்ன நடக்கும்? சத்தியத்தை மீறினால் என்ன நடக்கும்?
முதல் பக்கம் » துளிகள்
வழிபாட்டின் பலன் யாருக்கு?
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

31 அக்
2014
03:10

தேவையின் பொருட்டு கடவுளை துதிப்போருக்கும், பக்தி செலுத்துவோருக்கும் கடவுள் ஒரு நாளும் காட்சி அளிப்பதில்லை. எவன் ஒருவன் களங்கமற்ற மனதுடன், இறைவன் குறித்து ஏகாந்த சிந்தனையில் ஆழ்ந்திருக்கிறானோ, அவன் வழிமுறைகள் தவறு என்றாலும், அவனுக்கு, ஜோதிமயமான இறைவன் அவன் வேண்டிய உருவில் காட்சி தந்து அருளுகிறார். இதற்கு உதாரணமாக, சோழநாட்டைச் சேர்ந்த சனந்தனரின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தையே எடுத்துக் கொள்ளலாம்.

தன் இள வயதிலேயே நரசிம்ம மந்திர உபதேசம் பெற்றவர் சனந்தனர். இவர் ஒரு முறை, காட்டில் தியானத்தில் ஆழ்ந்திருந்த போது, வேடன் ஒருவன் சனந்தனரைப் பார்த்து, ’சாமி... இந்த காட்டுல கண்ண மூடி உட்கார்ந்துட்டு என்ன செய்றீங்க?’ எனக் கேட்டான். அவன் குரல் கேட்டு கண்விழித்த சனந்தனர், ’இந்த வேடனுக்கு நரசிம்மரை பற்றியும், அவருடைய உபாசனை குறித்தும் எப்படி சொல்லி புரிய வைப்பது...’ என நினைத்து,’வேடனே... நீ காட்டில் விலங்குகளை தேடுகிறாய் அல்லவா... அதுபோல, நானும் ஒரு விசித்திரமான விலங்கை கண்களை மூடியபடி, தேடிக் கொண்டிருக்கிறேன்...’ என்று கூறி, நரசிம்ம உருவத்தை விவரித்தார். அதைக்கேட்ட வேடன் வியந்து, ’பாதி சிங்கம்; பாதி மனித வடிவில் ஒரு உருவமா... ஆச்சரியமாக இருக்கே... இருந்தாலும், நீங்க கவலைப்படாதீர்கள். நாளை சூரியன் மறைவதற்குள் நீங்கள் சொன்ன அந்த விலங்கை கட்டி, இழுத்து வருவேன்; அப்படி கொண்டு வராவிட்டால், நெருப்பில் விழுந்து இறப்பேன்; இது சத்தியம்...’ என்று கூறி, புறப்பட்டான்.

மறுநாள் பொழுது விடிந்ததும், நரசிம்மத்தை தேடி, காடெங்கும் அலைந்தான் வேடன். அவன் சிந்தனை முழுவதும் நரசிம்மர் நினைவிலேயே இருந்தது; தண்ணீர் கூட அருந்தாமல் தேடி அலைந்தான். அந்தி சாயும் நேரம் நெருங்கியது, வேடன் மனம் உடைந்து போனான். ’அந்த நல்ல மனிதருக்கு, அவர் தேடும் விலங்கை கொண்டு வருவதாக வாக்கு கொடுத்தேனே... அதை நிறைவேற்றாத நான், இனிமேல் உயிருடன் இருக்கக் கூடாது...’ என்று நினைத்து, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டான். அப்போது, காடே அதிரும்படியாக ஒரு கர்ஜனை கேட்டது. வேடன் திரும்பிப் பார்த்தான்; அங்கே, நரசிம்மர் நின்றிருந்தார். அவரைப் பார்த்ததும், வேடனுக்கு கோபம் தாங்கவில்லை. காட்டு கொடிகளை நரசிம்மரின் கழுத்தில் கட்டி, ’தரதர’வென இழுத்து போய், சனந்தனரின் முன்னால் நிறுத்தி, ’சாமி, நீங்கள் தேடிய விலங்கை இழுத்துக் கொண்டு வந்து விட்டேன்...’ என்று கூறினான். சனந்தனருக்கு, நரசிம்மரின் கர்ஜனை கேட்டதே தவிர, உருவம் கண்ணுக்கு தெரியவில்லை. ’வேடனுக்கு கிடைத்த புண்ணியம் எனக்கு கிடைக்கவில்லையே...’ என்று அழுதார் சனந்தனர். அப்போது நரசிம்மர், ’சனந்தனா... இந்த வேடனுக்கு உள்ள ஏகாந்த சிந்தனை, ஒருமைப்பட்ட மனது உனக்கு ஏற்படவில்லை; அப்படி உனக்கு ஏற்படும் சமயத்தில் நான் உனக்கு அருள் புரிவேன்...’ என்று அசரீரியாக கூறினார். அந்த சனந்தனர் தான் பிற்காலத்தில் ஆதிசங்கரரின் சீடர்களில் ஒருவராகி, பத்மபாதர் என திருநாமம் பெற்றார். காபாலிகன் ஒருவன் ஆதிசங்கரரை கொல்ல முயன்ற போது, சனந்தனரின் உடம்பில் நரசிம்மர் ஆவாகனமாகி, காபாலிகனை கொன்று, ஆதிசங்கரரை காப்பாற்றினார் என்பது வரலாறு.

 
மேலும் துளிகள் »
temple news
முருகா என்றால் மும்மூர்த்திகளான அம்சம் பொருந்தியவன் என்று அர்த்தம். முருகனுக்கு எத்தனையோ விழாக்கள் ... மேலும்
 
temple news
சித்ரதுர்கா மாவட்டம், ஹிரியூரில் அமைந்து உள்ளது திரு மல்லேஸ்வரா கோவில். சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ... மேலும்
 
temple news
தட்சிண கன்னடா மங்களூரு தாலுகாவில் உள்ளது இனோலி கிராமம். இப்பகுதியில் அமைந்துள்ள வரலாற்று ... மேலும்
 
temple news
தட்சிண கன்னடா மாவட்டம், புராதன கோவில்களுக்கு பெயர் பெற்றது. இதில் பன்ட்வால் தாலுகாவின் பொளலி ... மேலும்
 
temple news
ராம்நகர் மாவட்டம் கனகபுராவின் கப்பாலு கிராமத்தில் அமைந்து உள்ளது ஸ்ரீ கப்பாலம்மா கோவில். இங்கு சக்தி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar