Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சத்தியத்தை மீறினால் என்ன நடக்கும்? அக்னி தீர்த்தம் பெயர்க் காரணம்! அக்னி தீர்த்தம் பெயர்க் காரணம்!
முதல் பக்கம் » துளிகள்
வலிமை மட்டும் போதுமா?
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

03 நவ
2014
04:11

அழியும் உடல்களை பெற்றுள்ள சாதாரண மானுட ஜீவன்களாகிய நாம், ஏதேதோ அற்ப விஷயங்களை நினைத்து பெருமை கொண்டு,  அதன் பொருட்டு ஆணவம் கொள்கிறோம். ஆனால், இப்பிரபஞ்சத்தின் முன், நாம் தூசுக்கு சமம். இவ்வுலகில் கடவுள் மட்டுமே  பெரியவன்; அவனே அனைத்திற்கும் ஆதாரம் என்று நினைத்தால், மனமானது ஆணவ சேற்றில் அமிழ்ந்து விடாது. சிவனிடம் பெற்ற வரத்தாலும், தன்னுடைய வீரத்தின் பேரில் தான் கொண்ட ஆணவத்தாலும் தேவர்களையும், முனிவர்களையும்  மதிக்காமல் இருந்ததுடன், அவர்களை துன்புறுத்தியும் வந்தான் ராவணன்.

ஒரு சமயம், தன் அமைச்சர் மகோதரனுடன் உலகின் பல இடங்களை சுற்றி வந்தான் ராவணன். அவர்களுடைய பயணம் பாதாள  லோகத்தை அடைந்தது; அங்கே, மகாபலி சக்கரவர்த்தி இருந்தார். மகாபலியைப் பற்றி அறிந்திருந்தாலும், தன் வீரத்தின் பேரில் இருந்த  ஆணவத்தால், நானே ரொம்பப் பெரியவன்; என்னை மிஞ்சிய வீரன் இவ்வுலகில் இல்லை... என்ற எண்ணத்துடன், ராவணன்,  மகாபலியைப் பார்த்து, நான் ராவணன் வந்திருக்கிறேன்... என்றான். மகாபலியோ, ஓ... இலங்கையில் ராவணன் என்ற பெயரில், ஒரு  சிறுவன் இருப்பதாகக் கேள்விப்பட்டேன்; அது நீ தானா... சரி... பக்கத்து அறையில், இரண்டு கடுக்கன்கள் இருக்கின்றன, அவற்றை எடுத்து  வா... என்றார். அந்த அறைக்குச் சென்ற ராவணன், நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. கடைசியில் வெறுங்கையோடு திரும்பி, தன்  இயலாமையை ஒப்புக் கொண்டான்.

மகாபலி சிரித்து, ராவணா... அந்த இரண்டு கடுக்கன்களும், என் கொள்ளுத் தாத்தா இரண்ய கசிபுவினுடையவை; பரந்தாமன், நரசிம்ம  அவதாரம் எடுத்து, இரண்ய கசிபுவை தூக்கிப் பிடித்து சுற்றிய போது, இரண்ய கசிபுவின் காதுகளில் இருந்த கடுக்கன்கள் சிதறி  விழுந்தன. அவற்றை எடுத்துப் பத்திரமாக வைத்திருந்தனர் என் முன்னோர். நானும், அவற்றைப் பாதுகாத்து வருகிறேன்; அவற்றைத்  தான், உன்னால் தூக்க முடியவில்லை என்கிறாய்... என்று விவரித்தார். தலை கவிழ்ந்து திரும்பினான் ராவணன். ஆனால், அதிலிருந்து  அவன் பாடம் கற்றுக் கொள்ளவில்லை. என்னால் தூக்க முடியாத அந்த கடுக்கன்களை அணிந்து, இரண்ய கசிபு நடமாடியிருக்கிறான்;  அவ்வளவு பெரிய பலசாலியான அவனும் அழிந்து போய் விட்டானே... என்று ராவணன் நினைத்திருந்தால் ராவணன் தவறு  செய்திருப்பானா, அவனுக்கு அழிவு தான் வந்திருக்குமா? கடவுள் ஒருவனுக்கு, திறமையைக் கொடுக்கிறார்; ஆணவமும், திமிரும்  தானாகவே வந்து ஒட்டிக் கொள்கிறது. அழிவைத் தேடிக் கொள்கிறான்.

 
மேலும் துளிகள் »
temple news
மாசி மாத மூன்றாம் பிறை தரிசிப்பது முற்பிறவி பாவங்களை போக்கும். சந்திரனே மனதிற்கும் உடலுக்கும் ... மேலும்
 
temple news
உத்தர கன்னடா மாவட்டம் சர்சி தாலுகாவின் பிசலகொப்பா கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ சூரியநாராயணா ... மேலும்
 
temple news
ஷிவமொக்கா மாவட்டம் ஹொசநகர் தாலுகா குப்பிகா கிராமத்தில், குலிகுலி சங்கரர் கோவில் உள்ளது. சிவனுக்கு ... மேலும்
 
temple news
பொதுவாக ஷிவமொக்கா மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணியர், ஜோக் நீர் வீழ்ச்சி, பனவாசி உட்பட, பல்வேறு ... மேலும்
 
temple news
சிவாஜி நகர்: பெங்களூரு சிவாஜி நகர் ஷெப்பிங்ஸ் சாலையில் உள்ள ஓம் சக்தி கோவிலில், இன்று ஓம் வராஹி அம்மன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar