அவலூர்பேட்டை: மேல்மலையனுõர் ஒன்றியம் நொச்சலூர் ஊராட்சியை சேர்ந்த தாதங்குப்பம் கிராமத்தில் செல்வ விநாயகர் கோவில் கும்பாபி÷ ஷக விழா 9 ம்தேதி நடக்கிறது. விழாவையோட்டி 8ம் தேதி மாலை 6 மணிக்கு மங்கள இசை, கணபதி , லட்சுமி, நவகிரக பூஜை ஹோமம், அங்குரார்ப்பணம், பூர்ணாயூதி தீபாராதனையும் நடக்கிறது. 9 ம்தேதி காலை 6 மணிக்கு 2 வது கால யாக சாலை பூஜையும், மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.