பதிவு செய்த நாள்
05
நவ
2014
12:11
திருப்பூர்: திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவிலில், கும்பாபிஷேக பணி மேற்கொண்டபோது, பழமையான சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டன. இக்கோவிலில் மூலவர், சயன கோலத்தில் வீற்றிருக்கிறார். ஸ்ரீ கனகவல்லி, ஸ்ரீ பூமாதேவி தாயார்களுக்கு, தனித்தனி சன்னிதிகளும் உள்ளன. பல நூறு ஆண்டுகள் பழமையான இக்கோவில், 1939ல் புதுப்பிக்கப்படும் போது, சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்கள், கற்கூரை ஆகியவை, மண்ணுக்குள் புதையுண்டன. இக்கோவிலில் தற்போது, 3 கோடி ரூபாய் மதிப்பில், திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. டிச., 1ம் தேதி, கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக பந்தல் அமைக்க குழி தோண்டுகையில், மண்ணுக்குள் புதையுண்ட நிலையில், நான்கு கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இவை, கருடாழ்வார், ஆழ்வார்கள், உடையவர், மணவாள மாமுனிகள் ஆகிய நான்கு பேரின் சிலைகள் ஆகும்