Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கைலாசநாதர் கோவில் பக்தர்கள் ... சென்னை சிவன் கோவில்களில் நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மணல் கொள்ளையால் சிவாலயத்திற்கு ஆபத்து!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

05 நவ
2014
01:11

ஊத்துக்கோட்டை: மணல் கொள்ளையால், பழமையான சிவன் கோவிலுக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது.ஆரணி ஆற்றின் கரையில் சுருட்டப்பள்ளி துவங்கி, ஒவ்வொரு பகுதியிலும் பழமையான சிவாலயங்கள் உள்ளன. இதில், ஊத்துக்கோட்டை அடுத்த பேரிட்டிவாக்கம் பகுதியில், ஆரணி ஆற்றை ஒட்டி உள்ளது குபேரலிங்கேஸ்வரர் கோவில். பழமையான இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு, சில ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.பிரதோஷம் உள்ளிட்ட விசேஷ நாட்களில், சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் சென்று சுவாமியை தரிசனம் செய்வர். கோவில் அமைந்துள்ள பகுதியை ஒட்டி, ஆரணி ஆற்றில் மணல் கொள்ளையர்கள் தொடர்ந்து மணலை திருடி வந்தனர். இதனால், கோவிலை ஒட்டிய கரை தனியாக தென்படுகிறது. மேலும், கோவில் அமைந்துள்ள பகுதியை ஒட்டி பேரிட்டிவாக்கம், அனந்தேரி, மாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலை உள்ளது. தொடர்ந்து மணல் எடுப்பதால், சாலையை ஒட்டி பெரிய அளவில் பள்ளமாக உள்ளது.மழைக்காலங்களில் பெரிய அளவில் வெள்ளம் ஏற்படும் போது, கோவில் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் சாலை, வெள்ளத்தில் அடித்து செல்லும் அபாயம் தோன்றி உள்ளது.எனவே, மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஆரணி ஆற்றில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுத்து, பேரிட்டிவாக்கம் பகுதியில் அபாய நிலையில் உள்ள கோவில், சாலையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்னர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவு நேர ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
கடலுார்: முத்தாலம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலமாக நடந்தது.கடலுார், திருப்பாதிரிப்புலியூர் ... மேலும்
 
temple news
கோவை; மாசி மாத பிறப்பு மற்றும் ஏகாதசி தினத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி ... மேலும்
 
temple news
கொடைக்கானல்; கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் அரோகரா கோஷத்துடன் தைப்பூச தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar