பதிவு செய்த நாள்
05
நவ
2014
01:11
உடுமலை : உடுமலை சுற்றுப்பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை நடந்தது.உடுமலை, குறிச்சிக்கோட்டை மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள சிவலிங்கேஸ்வரர் சன்னதியில், சுவாமிக்கு நேற்று மாலை 4.30 மணிக்கு, சிறப்பு அபிேஷகத்தை தொடர்ந்து, அலங்காரம் பூஜை நடந்தது. உடுமலை தில்லை நகரில் உள்ள ரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி, மாலை 4.30 மணிக்கு சுவாமிக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களில், அபிேஷகம் நடந்தது. ரத்தின லிங்கேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை செய்யப்பட்டது.உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் உள்ள சிவன் சன்னதி, பெதப்பம்பட்டி ரோடு, ஏரிப்பாளையத்தில் உள்ள சித்தாண்டீஸ்வரர் கோவில், எலையமுத்துார் பிரிவில் உள்ள புவன கணபதி கோவிலில் உள்ள சிவன் சன்னதி, ருத்ரப்பா நகரில் உள்ள பஞ்சமுக லிங்கேஸ்வரர் கோவில், மடத்துக்குளம், கொழுமத்தில் உள்ள தாண்டேஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில்களில், பிரதோஷம் முன்னிட்டு, சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன.