பதிவு செய்த நாள்
05
நவ
2014
01:11
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில், நாளை அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, திருவள்ளூர், திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், பூங்கா நகர், சிவா - விஷ்ணு கோவில், பெரியகுப்பம் ஆதிபுரீஸ்வரர் கோவில், மணவாளநகர்மங்களீஸ்வரர் கோவில், ஆகிய சிவன் கோவில்களில், நாளை (6ம் தேதி) அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி, மாலை 5:30 மணிக்கு, மூலவருக்கு அன்னத்தால் சிறப்பு அலங்காரம் செய்து, அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெறும்.இதே போல், திருப்பாச்சூர் வாசீஸ்வரர், பேரம்பாக்கம் சோளீஸ்வரர் என, மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களிலும், அன்னாபிஷேகம் நடைபெறும்.