Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செஞ்சியில் பிரதோஷ வழிபாடு! காரிமங்கலம் ஐப்பசி பவுர்ணமி சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆத்தூர் ஈஸ்வரன் கோவில்களில் பிரதோஷ விழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 நவ
2014
01:11

ஆத்தூர் : ஆத்தூர் அருகே, தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.ஆத்தூர் அடுத்த, தென்பொன்பரப்பி கிராமத்தில், 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சொர்ணபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, 16 ஆண்டுகளாக சிவனை வேண்டி தவம் இருந்த, தலைமை சித்தர் காகபுஜண்டருக்கு, பிரதோஷ நாளில், 16 உருவங்களாக சிவன் காட்சி தந்தார். இதனால், இக்கோவிலில், 5.5 அடி உயரத்தில், 16 முகங்கள் கொண்ட சோடலிங்கமாக, சொர்ணபுரீஸ்வரர் காட்சி தருகிறார்.நேற்று, பிரதோஷ பூஜையையொட்டி, சொர்ணபுரீஸ்வரர், நந்தி பெருமானுக்கு, பால், தயிர், வெண்ணெய், நெய், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம், மூலிகை நீர் என, 16 வகையான அபிஷேகம் செய்தனர். சொர்ணபுரீஸ்வரர், நந்தி பெருமான், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

ஆத்தூர் கோட்டை காயநிர்மலேஸ்வரர், கைலாசநாதர், ஆறகளூர் காமநாதீஸ்வரர், வீரகனூர் கங்கா சவுந்தரேஸ்வரர், ஏத்தாப்பூர் சாம்பமூர்த்தீஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோவில்களில், சிறப்பு பிரதோஷ பூஜை நடந்தது. இதில், ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, வீரகனூர், வாழப்பாடி, சின்னசேலம் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவின் ஆறாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் ரிஷப வாகனத்தில் பவனி ... மேலும்
 
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar