மேட்டுப்பாளையம் ண நஞ்சையா லிங்கம்மாள் பாலிடெக்னிக் கல்லுாரியில் வல்லப விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. ÷ மட்டுப்பாளையம் சிறுமுகை ரோட்டில் நஞ்சையா லிங்கம்மாள் பாலிடெக்னிக் கல்லுாரி உள்ளது. இங்கு புதிதாக வல்லப விநாயகர் கோவில் கட்டப்பட்டது. இதன் கும்பாபிஷேக விழா கடந்த 10ம் தேதி துவங்கியது. நேற்று காலை 5.30 மணிக்கு நான்காம் கால வேள்வி பூஜை நடந்தது. தொடர்ந்து 7.00 மணிக்கு திருநெறிய தமிழ் முறைப்படி, திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடந்தது. பேரூர் இளையபட்டம் மருதாசல அடிகள், காரமடை தொட்டிகளையம் கருப்பராய அடிகள், பிள்ளையார் பீடம் பொன்மணிவாசக அடிகள் ஆகியோர் முன்னிலையில், கவுமார மடாலயம் குமரகுருபர சுவாமிகள், கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தார். கல்லுாரி நிர்வாக அறங்காவலர் மனோகரன், முதல்வர் சண்முகம், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.