Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீரராகவப் பெருமாள் கும்பாபிஷேகம்: ... அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம்! அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழமையான கோவில் சிற்பம், கோபுரம் சிதிலம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2014
12:11

காஞ்சிபுரம் மாவட்டம், வெடால் கிராமத்தில் உள்ள வடவாமுகானீஸ்வரர் கோவில், பராமரிப்பின்றி சீரழிந்து வருவது, பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், சித்தாமூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது, வெடால் ஊராட்சி. இந்த ஊராட்சியில், புகழ்பெற்ற வசந்த நாயகி உடனான வடவா முகானீஸ்வரர் கோவில் அமைந்து உள்ளது.

Default Image
Next News

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில், ராஜ ராஜ சோழர் காலத்தில் கட்டப்பட்டது. இரண்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோவிலில் அம்பாள் சன்னிதி, வலது காலை தொடை மீது வைத்தவாறு வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தி, விநாயகர் சன்னிதி, துர்கையம்மன், கங்காதேவி உள்ளிட்ட சன்னிதிகள் உள்ளன. மேலும், எங்கும் காண முடியாத ஜேஸ்டா தேவியும், கோவிலின் வலது புறத்தில் வீற்றுள்ளார். இக்கோவிலில், ஆண்டு தோறும் கார்த்திகை தீபத்விழா, சோமவார பூஜைகள், மாதம் இருமுறை பிரதோஷம் பூஜைகள், ஆண்டு விழா உள்ளிட்டவை சிறப்பாக நடைபெறும். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோவில், நாளடைவில் போதிய பராமரிப்பின்றி பாழடைந்து, சுவர்களில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது. முன்னர், இக்கோவிலில் இரண்டு கால பூஜை நடந்தன. தற்போது, ஒரு கால பூஜை மட்டுமே நடக்கும் அவலம் உள்ளது. எனவே, வரலாற்று சிறப்புமிக்க இக்கோவிலை புனரமைத்து முறையாக பராமரிக்க, இந்து சமய அறநிலையத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar