Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சாமி கும்பிட சண்டை போடுவதா: ... பழநி ரோப்கார் பராமரிப்பு பணிக்காக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேலம் கோவில்களில் நேற்று நடந்த திருமணங்கள் 1,120!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2014
12:12

சேலம்: ஆண்டின் கடைசி முகூர்த்த நாளான நேற்று, சேலம் மாநகர், புறநகர் கோவில்களில், 1,000 க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்துள்ளன. திருமண மண்டபங்கள் ஹவுஸ்புல்லாக காட்சி அளித்தன.

கார்த்திகை பண்டிகை: நடப்பு, 2014ம் ஆண்டின், டிச., 1 மற்றும் 10ம் தேதிகள், முகூர்த்த தினங்கள். இதில், டிச., 6ம் தேதி, கார்த்திகை பண்டிகை கொண்டாப்படுகிறது. பண்டிகைக்கு பின் வரும் தேய்பிறை நாளில், திருமணம் உள்ளிட்ட சுபகாரிய நிகழ்ச்சிகளை, சேலம் மக்கள் தவிர்த்து விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அது மட்டுமின்றி, இதை தொடர்ந்து, மார்கழி மாதம் பீடை மாதம் என, சித்தரிக்கப்படுவதால், அந்த மாதத்திலும், சுப நிகழ்ச்சிகளை தவிர்த்து விடுவது வழக்கம். இதனால், நேற்றைய முகூர்த்த நாள், நடப்பாண்டின் கடைசி முகூர்த்த நாளாக கருதப்பட்டது.

சமுதாய கூடங்கள்: நேற்று, சேலம் மாநகரில் பிரபல திருமண மண்டபங்கள், சிறிய அளவிலான மண்டபங்கள், சமுதாய கூடங்கள், திருமண கோஷ்டியினரால் நிரம்பி வழிந்தன. அது மட்டுமின்றி, நட்சத்திர ஓட்டல் கூட்ட அரங்குகளிலும் திருமண நிகழ்ச்சிகள் நடந்தன. சேலம் மாநகரில், பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோவிலில், 102; கோட்டை பெருமாள் கோவிலில், 46; உத்தமசோழபுரம் கைலாசநாதர் கோவிலில், 110; ஊத்துமலை முருகன் கோவிலில், 22; கடை வீதி காசி விஸ்வநாதர் கோவிலில், 16, திருமணங்கள் நடந்துள்ளன. மேலும், ஏற்காடு அடிவாரம் ஆறுபடை முருகன் கோவிலில், 120, அம்மாபேட்டை செங்குந்தர் பாலசுப்ரமணியர் கோவில், அயோத்தியாபட்டணம் ராமர் கோவில், செட்டிச்சாவடி முருகன் கோவில், பேர்லேன்ட்ஸ் முருகன் கோவில் என, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள், தனியார் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், மொத்தம், 1,120 திருமணங்கள் நடந்துள்ளன.

புரோகிதர்களுக்கு மவுசு: நடப்பாண்டின் கடைசி முகூர்த்த நாளான நேற்று, திருமணங்களின் எண்ணிக்கையில், பல மடங்கு அதிகரிப்பு ஏற்பட்டது. நேற்று காலை, 6:00 மணி துவங்கி, 10:00 மணி வரை, குறிப்பிட்ட நேரத்தில், 1,000 திருமணங்கள் நடந்தன. இதனால், புரோகிதர்களுக்கு மவுசு அதிகரித்தது. ஒரே புரோகிதர், பல திருமணங்களுக்கு ஒத்துக் கொண்டதால், கார்களிலும், மொபட் உள்ளிட்ட வாகனங்களிலும், புரோகிதர்கள் திருமணம் நடக்கும் இடங்களுக்கு, அவசர அவசரமாக சென்று திருமணங்களை நடத்தி வைத்தனர். அது மட்டுமின்றி, சில இடங்களில் புரோகிதர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், வழக்கமான, தற்காலிக புரோகிதர்கள் காத்திருந்து கார்களில் அழைத்துச் சென்று, திருமணங்களை நடத்திய சம்பவங்களும் அரங்கேறின.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar