விழுப்புரம்: விழுப்புரம் பாண்டுரங்கன் பீடத்தில் கைசிக ஏகாதசி உற்சவம் நடந்தது. விழுப்புரம் திரு.வி.க., வீதியில் அமைந்துள்ள பாண்டுரங்கன் பீடத்தில் கைசிக ஏகாதசி உற்சவம் நடந்தது. இதையொட்டி ருக்மணி சமேத பாண்டுரங்கனுக்கு நேற்று முன் தினம் காலை 7:00 மணிக்கு சிறப்பு திரு மஞ்சனம், அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. மாலை 6:00 மணிக்கு பஜனை, கூட்டு பிராத்தனை, 6:30 மணிக்கு பாண்டுரங்கன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 7:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை பாண்டுரங்கன் பீட நிர்வாகிகள் செய்தி ருந்தனர்.