Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுச்சேரி கார்த்திகை தீப விழா! கார்த்திகை தீப திருநாள் கோவிலில் சிறப்பு பூஜை! கார்த்திகை தீப திருநாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் "அரோகரா கோஷத்துடன் ஒளி வீசிய திருகார்த்திகை தீபம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

06 டிச
2014
12:12

பழநி: பழநி மலைக்கோயிலில் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கோஷத்துடன் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. பழநியில் கார்த்திகை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய கார்த்திகையை முன்னிட்டு பகல் 2 மணிக்கு சண்முகார்ச்சனையும், சண்முகர் தீபாராதனையும், மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடந்தது. தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரசுவாமி தீப ஸ்தம்பம் அருகேயுள்ள மண்டபத்திற்கு எழுந்தருளினார். மூலவர் ஞானதண்டாயுதபாணி சன்னதியிலிருந்து பரணி தீபம் எடுத்துவரப்பட்டு உட்பிரகாரத்தின் நான்கு மூலைகளிலும் தீபம் ஏற்றப்பட்டது. மாலை 6 மணிக்கு மேற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள தீபஸ்தம்பத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. பக்தர்கள் "வெற்றி வேல்முருகனுக்கு அரோகரா, பழநியாண்டவருக்கு அரோகரா என சரணகோஷங்களை எழுப்பினர். கார்த்திகைபொறி, அப்பம் நைவேத்திய பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. திருஆவினனன்குடி கோயில், பெரியநாயகியம்மன் கோயில்களில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. மலைகோயிலுக்கு செல்லும் படிப்பாதை , திருஆவினன்குடிகோயில் உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, பவுர்ணமி கருட சேவை மிகுந்த பிரம்மாண்டத்துடன் ... மேலும்
 
temple news
மேலுார்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உப கோயிலான திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலில் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ரூ. 2.10 கோடி செலவில் புனித நீராடும் பாதையை புதுப்பிக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar