Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரி மலையில் நாளை! மண் மலையான மண்பிடி திருவிழா! மண் மலையான மண்பிடி திருவிழா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் போலீஸ் படைகள் "உஷார்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

06 டிச
2014
01:12

சபரிமலை டிச.ஆறு பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி சபரிமலையில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. சபரிமலையின் ஒவ்வொரு மூலையும் நவீன கருவிகளால் சோதனை செய்யப்பட்டு வருகிறது. ஸ்ரீகோயில், 18-ம் படி, கொடிமரம், சோபானம் ஆகிய இடங்கள் கேரள போலீஸ் மற்றும் மத்திய அதிவிரைவு படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சிறப்பு பயிற்சி பெற்ற கமாண்டோக்கள் நவீன துப்பாக்கிகளுடன் கோயிலை சுற்றி நிறுத்தப்பட்டுள்ளனர். மத்திய ரிசர்வ் போலீசாரின் அதிரடிப்படை பிரிவினருக்கு எவ்வித நெருக்கடியையும் எதிர் கொள்வதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் நிவாரணப்படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். கோயிலின் எல்லா வாசல்களிலம் மெட்டல் டிடெக்டர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. நடைப்பந்தலில் எக்ஸ்ரே ஸ்கேனர்களில் பக்தர்களின் பைகள் ஸ்கேன் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. அண்டை மாநிலங்களில் இருந்து வந்துள்ள போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சன்னிதானத்தின் சுற்றப்புறங்களில் உள்ள குப்பை தொட்டிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் மெட்டர் டிடெக்டர் மற்றும் நவீன கருவிகளால் சோதனை செய்யப்பட்டு வருகிறது. குப்பை கூட்டப்பட்டிருக்கும் இடங்களையும் போலீசார் விட்டுவைக்கவில்லை. கடைகளில் அடையாள அட்டை இல்லாமல் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் வெளியேறி விட்டனர்.பம்பையில் கணபதி கோயில் அருகில் அனைத்து பக்தர்களும் மெட்டல் டிடெக்டர் பரிசோதனைக்கு பின்னரே மலையேற அனுமதிக்கப் பட்டனர்.பம்பையில் இருந்து சன்னிதானம் வந்து தரிசனம் நடத்துவதற்கிடையில் மூன்று இடங்களில் பக்தர்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதிக்கப் படுகின்றனர். சன்னிதானத்தில் அறைகளில் தங்கியிருப்பவர்கள் பட்டியல் சேகரிக்கப்பட்டு அவையும் போலீசாரின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில், ஸ்ரீ பத்மாவதி தாயார் சீனிவாசன் பெருமான் திருக்கல்யாண உற்சவங்கள் இன்று ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar