Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலையில் மஹா தீப தரிசனம் ... திருவாடானை, உத்திரகோசமங்கை கோயில்களில் சங்காபிஷேகம் ! திருவாடானை, உத்திரகோசமங்கை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குறை தீர்க்கும் குச்சனூர் சனீஸ்வரர்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

16 டிச
2014
02:12

தேனியில் இருந்து 30 கி.மீ., தூரத்தில் செண்பகநல்லூர் என்ற ஊர் இருந்தது. இப்பகுதியை ஆண்ட தினகரன் என்ற மன்னன் குழந்தை வரம் வேண்டி இறைவனிடம் வேண்டினான். அப்போது அசரீரியின் குரல் கேட்டது. ""தினகரா! உன் வீட்டுக்கு ஒரு பிராமணச் சிறுவன் வருவான். அவன் வந்த பிறகு உனக்கு குழந்தை பிறக்கும், என்றது. அதன்படியே, ஒருநாள் அரண்மனைக்கு வந்த சிறுவனுக்கு சந்திரவதனன் என்று பெயரிட்டு வளர்த்தான்.

சந்திரவதனன் வந்ததும் அரசி கருவுற்றாள். ஆண்குழந்தை பிறந்து சதாகன் என்ற பெயரிட்டனர். ஆனாலும், புத்திசாலியும். தன் வீட்டுக்கு இறையருளால் வந்தவனுமான வளர்ப்பு மகன் சந்திரவதனுக்கே மன்னன் முடிசூட்டி ஓய்வு பெற்றான். இந்நிலையில் தினகரனுக்கு ஏழரைச்சனி பிடித்தது. உடனே சந்திரவதனன். இப்பகுதியிலுள்ள சுரபி நதிக்கரைக்கு சென்று, இரும்பால் சனீஸ்வரர் உருவத்தை படைத்தான். அவரிடம், ""சனீஸ்வரரே! சொந்த மகனுக்கு கூட முடி சூட்டாமல், வளர்ப்பு மகனான எனக்கு முடிசூட்டிய என் தந்தை எவ்வளவு பரந்த மனம் உள்ளவர்.

வளர்ப்பு மகன் என்றும் பாராமல், மூத்த மகனாகக் கருதி சுயநலம் பாராமல் எனக்கு முடிசூட்டிய அவர் எவ்வளவு நல்லவர்! நல்லவர்களையும், நியாயஸ்தர்களையும் நீ அணுக மாட்டாய் என்பது தானே ஐதீகம். எனவே அவருக்கு எந்த துன்பமும் தராதே. ஒருவேளை, அவர் முன்வினைப் பயனால் துன்பத்தை அனுபவிக்க விதியிருந்தாலும், அதை எனக்கு கொடு, என்று வேண்டினான். சனீஸ்வர பகவான் அவனது பிரார்த்தனையில் இருந்த நியாயத்தை உணர்ந்து ஏழரை நாழிகை (3மணி நேரம்) மட்டும் தினகரனை பிடித்துக்கொள்வதாக கூறி, அந்த நேரத்திற்குள் பல கஷ்டங்களைக் கொடுத்தார். பின்பு தினகரன் முன் தோன்றி, ""உன்னைப்போன்ற நல்லவர்களை நான் பிடிக்க மாட்டேன். இருப்பினும், இப்போது உன்னை பிடித்தற்கு காரணம் உன் முன் ஜென்ம வினைப்பயனே. உன் கதையைக் கேட்பவர்கள் இனியேனும் சுயநலமின்றி பிறர் நலம் கருதட்டும். அவர்களுக்கு என்னால் வரும் கஷ்டம் குறையும்," என்று கூறி மறைந்தார்.

பிறகு, சந்திரவதனன் இவ்வூரில் குச்சுப்புல்லால் கூரை வேய்ந்து, சனீஸ்வரருக்கு கோயில் எழுப்பினான். இதன் பின் செண்பகநல்லூர் என்ற பெயர் மாறி, குச்சுப்புல்லின் பெயரால் "குச்சனூர் என அழைக்கப்பட்டது. அதுவே இன்று வரை நிலைத்து விட்டது.மற்ற ஊர்களில், சிலை வடிவில் காட்சி தரும் சனீஸ்வரர், இங்கே லிங்கவடிவில் காட்சி தருகிறார். சனிக்கு "ஈஸ்வரன் என்ற பட்டம் உண்டு. இதைக் குறிக்கும் வகையில் லிங்கமாக காட்சியளிப்பதாகச் சொல்கிறார்கள்.இந்த லிங்கம் வளர்ந்து கொண்டே வந்ததாம். அதைக் கட்டுப்படுத்த மஞ்சள்காப்பு பூசப்பட்டது. அதன்பின் அதே நிலையில் நின்று விட்டது. சனி தோஷம் உள்ளவர்கள் மனமுருகி வேண்டிக்கொண்டால் அவர்களுக்கு சோதனைகள் விலகி சுபிட்சம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க, வியாபார விருத்தி மற்றும் குடும்ப நலம் ஆகியவற்றுக்காகவும் பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர். சனிபகவானுக்கே பிரம்மஹத்தி தோஷம் பிடித்ததாகவும், இங்கு வந்து அது நீங்கியதாகவும் இன்னொரு வரலாறு சொல்கிறது.


புராணத்தில் சனீஸ்வரர் : சூரியனுக்கு உஷாதேவி மனைவியாக இருந்தாள். அவளுக்கு வைவசுதமனு, எமதர்மன், யமுனை, அசுவினி தேவர்கள் ஆகிய பிள்ளைகள் இருந்தனர்.
சூரியனின் வெப்பம் தாளாத உஷாதேவி, அவருடன் வாழ முடியாமல், தன் நிழலையே ஒரு பெண்ணாக்கி சூரியனிடம் விட்டு விட்டு தவமிருக்கச் சென்று விட்டாள். நிழல் பெண்ணுக்கு "சாயா என்று பெயர். அவளுக்கு சூரியன் மூலம் மனு, சனி பிறந்தனர். சாயாதேவியின் ரகசியத்தை அறிந்த எமதர்மன், தன் தந்தை சூரியனிடம் கூறி விட, சூரியன் சாயாதேவியையும், அவளின் பிள்ளைகளையும் வெறுத்தார். இதனால், சனிக்கும் தந்தை சூரியனுக்கும் பகை உண்டானது. சாயாதேவி தன் கணவரான சூரியனிடம் மன்னிப்பு கேட்டதோடு, முதல் மனைவியான உஷாவையும் அழைத்து வந்தாள். அதன் பின் உஷா, சாயா இருவரும் சூரியனோடு இணைந்து வாழத் தொடங்கினர். சனி பகவான், சிவனை நோக்கி தவம் செய்து சனீஸ்வரர் என்ற பட்டம் பெற்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஐப்பசி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவிற்க்கு முகூர்த்தக்கால் நடும் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; உலகப் புகழ்பெற்ற, தஞ்சை பெரிய கோவிலை, கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040வது , கோலாகலமாக ... மேலும்
 
temple news
புதுச்சேரி, கவுசிக பாலசுப்பிரமணியர் கோவில் சஷ்டி நிறைவு விழாவை யொட்டி வள்ளி, தெய்வானை சமேத கௌசிக ... மேலும்
 
temple news
சென்னை; பெசன்ட் நகர், அஷ்டலட்சுமி கோவிலில், 2 கோடி ரூபாயில் திருப்பணிகள் முடிந்த நிலையில் இன்று மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar