பதிவு செய்த நாள்
16
டிச
2014
02:12
சென்னிமலை : சென்னிமலை மலை மீது கோவில் கொண்டுள்ள ஸ்ரீசுப்பிரமணிய ஸ்வாமிக்கு, ஆண்டு தோறும் மார்கழி மாத விழா குழுவினரால், மாதம் முழுவதும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
இந்த ஆண்டு விழா, இன்று (16ம் தேதி) துவங்கி, மார்கழி, 30 நாட்களும் நடந்து, ஜன., 14ம் தேதி நிறைவடைகிறது. தினமும் காலை, 5.30 மணிக்கு, கோ பூஜையும், 5.45 மணிக்கு அபிஷேகம், 6.15 மணிக்கு தீபாராதனை, 6.30 மணிக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கும்.ஜனவரி, 11ம் தேதி காலை, மேட்டுப்பாளையம் வனபத்தரகாளியம்மன் கோவில் சென்று, தீர்த்தம் கொண்டு வந்து, சிறப்பு அபிஷேகமும், 14ம் தேதி காலை, 5 மணிக்கு சண்முகா அர்ச்சனை, சிறப்பு பூஜையும் நடக்கிறது.மார்கழி மாதத்தில் தினமும், அதிகாலை இறைவனை வழிபட்டால், சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்ற சான்றோர் வாக்குப்படி, பூஜையில் பங்கேற்க, சென்னிமலை மார்கழி மாத விழா குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.