பதிவு செய்த நாள்
16
டிச
2014
03:12
கீழக்கரை : கீழக்கரை அருகே காஞ்சிரங்குடியில் உள்ள பக்கீர் அப்பா வலியுல்லா தர்காவில் சந்தனக்கூடு திருவிழா இன்று நடக்கிறது. இதையொட்டி, கடந்த டிச.,3 மாலை கொடியேற்றப்பட்டது. நேற்று மாலை 5 குதிரைகள் முன் செல்ல காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இன்று அதிகாலை 4:00 மணிக்கு காஞ்சிரங்குடி ஜும் ஆ பள்ளிவாசலில் இருந்து அலங்கார சந்தனக்கூடு எனும் உரூஸ், ஊர்வலமாக புறப்பட்டு தர்கா வந்தடைகிறது. பின், அலங்கரிக்கப்பட்ட வெள்ளிப்பேழையில் இருந்து சந்தனத்தை எடுத்து மகான்
பக்கீர் அப்பாவின் மக்பரா (சமாதிக்கு) பூசப்பட்டு, உலக நன்மைக்கான சிறப்பு துஆ ஓதப்படும். மாலை 5 மணிக்கு தர்காவிலிருந்து மீண்டும் ஜும்ஆ பள்ளிவாசலுக்கு சந்தனக்கூடு ஊர்வலமாக வந்து சேரும். வரும் டிச.,23 ல் கந்தூரி அன்னதானமும், கொடி இறக்கமும் நடைபெறும். ஏற்பாடுகளை கமிட்டி தலைவர் நஜீமுன் அலி, செயலாளர் அன்வர், மக்கா மஜீத் நிர்வாகிகள் சதக் முகம்மது, சம்சுதீன், நூர்முகம்மது, முஹப்பத்துல்லா, சேகு இப்ராகிம்ஷா, காதர்ஷா, பதுருஸமான், இஸ்மாயில், கோரைக்கூட்டம் பட்டாணி அப்பா தர்கா நிர்வாகிகள் அபுல்உசேன், நூர் லக் செய்துள்ளனர்.