Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! அணையில் கிடைத்த சாமி சிலைகள்! அணையில் கிடைத்த சாமி சிலைகள்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பராந்தக சோழன் காலத்து கோவில் இடிபாடு கண்டுபிடிப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2011
03:06

மயிலாடுதுறை: தலைச்சங்காட்டில் தொல்லியல் துறை சார்பில் நடந்து வரும் அகழ்வாராச்சியில் பராந்தக சோழன் காலத்து கோவிலின் இடிபா டுகள், வட்ட எழுத்துக்களுடன் கூடிய கல்வெட்டுக்கள் மற்றும் சங்க கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகேயுள்ள பூம்புகார் பன்டைய சோழர் காலத்து தலைநகராக இருந்த போது, பூம்புகார் நகரின் ஒரு பகுதியாக தலைச்சங்காடு என்ற ஊர் விளங்கியது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் இப்பகுதியில் அவ்வப்போது முதுமக் கள் தாழி, உறை கிணறுகள் கிடைத்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தலைச்சங்காடு கிராமத்தில் உள்ள அரசு நடுநிலை பள்ளி விளையாட்டு மைதானத்தில் தரங்கம்பாடி டேனிஷ் கோட் டை காப்பாட்சியர் முத்துசாமி தலைமையில் தமிழக தொல்லியல் துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களாக அகழ்வாராச்சி பணி களை நடத்தி வருகின்றனர். இந்த அகழ்வாராச்சியில் பன்டைய கோவிலின் சிதைந்த இடிபாடுகள் மற்றும் சிற்பங்கள் கிடைத்துள்ளன. அதில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கல்வெட்டில் உள்ள வட்ட எழுத்துக்கள் மூலம் இவை கி.பி.,907 முதல் 954 வரையிலான பராந்தக சோழன் காலத்தை சார்ந்தது என தொல்லியல் துறை ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. மேலும் சங்க காலத்தை சார்ந்த வியாபாரிகள் கழுத்தில் அணியும் கல் மணிகள், உறை கிணறுகளில் பயன்படுத்தப்பட்ட பல வடிவ செங்கற்கள், ஜாடிகள், கிண்ணங்கள், கிண்டிகள், சங்கு வளையல்கள் மற்றும் 18ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பூமியில் 12 அடி ஆழம் வரை தோண்டி நடத்தப்படும் அகழ்வாராச்சியில் 3 அடுக்குகளில் பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்    பட்டுள்ளது. தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் சங்க காலம் தொடங்கி நாயக்கர் காலத்து உண்மைக ளும், பழங்கால கோவிலும் அதன் மூலம் பல்வேறு சரித்திர உண்மைகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான இன்று கருட சேவை நடந்தது உற்சவர் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar