Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புண்ணியம் அளிக்கும் ஸ்ரீரங்கநாதர்! சபரிமலையில் அவசரகால சேவை மையம்! சபரிமலையில் அவசரகால சேவை மையம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆரன்முளாவில் புறப்பட்டது தங்கஅங்கி பவனி!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 டிச
2014
12:12

சபரிமலை: சபரிமலையில் மண்டல பூஜைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், நேற்று ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலிலிருந்து தங்கஅங்கி பவனி புறப்பட்டது.

Default Image
Next News

சபரிமலையில் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் 41 நாட்கள் நடைபெறும் பூஜையின் இறுதி நாளில் நடப்பது மண்டல பூஜை. இந்நாளில் ஐயப்பனின் விக்ரகத்தில் அணிவிக்க திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா வழங்கிய தங்க அங்கி பவனியாக எடுத்து வரப்படும். ஆரன்முளா பார்த்த சாரதி கோயிலில் இருந்து மண்டலபூஜைக்கு நான்கு நாட்கள் முன்னதாக சபரிமலை மாதிரி ரதத்தில் எடுத்து வரப்படும். நேற்று அதிகாலை 5 மணி முதல் கோயில் முன்புறம் பக்தர்கள் தரிசனத்திற்காக அங்கி வைக்கப்பட்டது. நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர். காலை 6.30 க்கு அங்கி ரதத்தில் வைக்கப்பட்டு, 7 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் புறப்பட்டது. நேற்று இரவு ஓமல்லூர் பகவதி கோயிலில் தங்கியது. இன்று இரவு கோந்நி முருங்கமங்கலம் கோயிலிலும், நாளை இரவு பெருநாடு சாஸ்தா கோயிலிலும் தங்குகிறது. டிச., 26ம் தேதி காலை புறப்பட்டு மதியம் பம்பை கணபதி கோயில் அருகில் தரிசனத்துக்காக வைக்கப்படும் மாலை 3 மணிக்கு தலைச்சுமையாக சன்னிதானத்துக்கு கொண்டு வரப்படும். டிச., 26 மாலை 6.30 மணிக்கு தங்கஅங்கி சாத்தி தீபாராதனை நடைபெறும். 27ல் மண்டல பூஜை நேரத்திலும் ஐயப்பனுக்கு அங்கி அணிவிக்க படும். கேரள தேவசம் போர்டு அமைச்சர் சிவகுமார் தலைமையில் சன்னிதானத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar