Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் அவசரகால சேவை மையம்! ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: சிறப்பு அலங்காரத்தில் ரெங்கநாதர்! ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலையில் காணிக்கையை கணக்கிட கட்டடம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 டிச
2014
12:12

திருப்பதி: திருமலை ஏழுமலையானுக்கு வழங்கப்படும், காணிக்கைகளை கணக்கிட, புதிய கட்டடம் கட்ட, தேவஸ்தான அதிகாரிகள்  முடிவு செய்துள்ளனர். திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள், தங்களால் இயன்ற காணிக்கைகளை, உண்டியலில்  செலுத்துகின்றனர். இதற்காக, கோவிலுக்குள், தேவஸ்தானம், பெரிய உண்டியல் ஒன்றை வைத்துள்ளது. காணிக்கைகளை கணக்கிட,  கோவிலுக்குள் உள்ள, சம்பங்கி பிரகாரத்தில் (குபேர மூலை), ’பராக்காமணி’ என்ற பிரிவை, தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது. இங்கு  காணிக்கை கணக்கிடப்பட்டு, வங்கிகளில் டிபாசிட் செய்யப்படுகிறது. தற்போது, திருமலைக்கு, அதிக எண்ணிக்கையில் பக்தர்கள்  வருவதால், உண்டியல் வருமானமும் அதிகரித்து வருகிறது. இதனால், காணிக்கைகள் பிரிக்கப்பட்டு, நாணயங்கள், திருப்பதியில் உள்ள,  தேவஸ்தான தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு கணக்கிடப்படுகிறது. நாள்தோறும், நாயணங்கள் கொண்டு  செல்வதில், சிக்கல் ஏற்பட்டதால், கடந்த ஆண்டு, கோவில் மதில் சுவரில், இரும்பு கம்பி அமைத்து, நாணயங்கள் கொண்டு வர,  தேவஸ்தான அதிகாரிகள் திட்டமிட்டனர். இது, ஆகம விதிக்கு முரணாக இருப்பதாக, பலர் குற்றம் சாட்டியதால், சுவரில் அமைக்கப்பட்ட  இரும்பு கம்பி அகற்றப்பட்டு, நாணய மூட்டை, கோவிலுக்குள் வைக்கப்பட்டது. நாணய மூட்டைகள், அளவுக்கு அதிகமாக சேர்ந்ததால்,  கடந்த ஒரு மாதமாக ஊழியர்கள், கல்யாண உற்சவம் முடிந்த பின், மதியத்திற்கு மேல், அந்த மண்டபத்தில் கணக்கிட்டு வருகின்றனர்.  காணிக்ககை கணக்கிடும் இடத்தில், இட பற்றாக்குறை நிலவி வருவதால், கோவிலுக்கு வெளியில், புதிய கட்டடம் கட்ட, அதிகாரிகள்  முடிவு செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி: அய்யம்பாளையம் சடையாண்டி கோவில் திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கிடா விருந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar