Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: ... வன்னிய பெருமாள் கோவிலில் ஆஞ்சநேயர் வீதியுலா! வன்னிய பெருமாள் கோவிலில் ஆஞ்சநேயர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

25 டிச
2014
11:12

புதுச்சேரி: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி புதுச்சேரி பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் மாலை முதல் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனைகள் நடந்தன. திரளான கிறிஸ்துவர்கள் பங்கேற்றனர்.

தூய இருதய ஆண்டவர் பசிலிக்காதூய இருதய ஆண்டவர் பசிலிக்காவில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில், இரவு 11:30 மணிக்கு குழந்தை ஏசு பிறப்பு நிகழ்ச்சி துவங்கியது. நள்ளிரவு ௧௨:௦௦ மணியளவில், ஆலய அதிபர் மற்றும் பங்கு தந்தை மரிய ஜோசப், குழந்தை ஏசு சொரூபத்தை ஏந்தி வந்து குடிலில் வைத்தார். புனித ஜென்மராக்கினி மாதா ஆலயம்மிஷன் வீதி புனித ஜென்மராகினி மாதா ஆலயத்தில் நடந்த விழாவில், புதுச்சேரி கடலுார் உயர் மறை மாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடந்தது. அதைத்தொடர்ந்து, ஆலய பங்கு தந்தை அல்போன்ஸ் சந்தனம், பாதிரியார் அருமைச்செல்வம் ஆகியோர் குழந்தை ஏசுவின் சொரூபத்தை குடிலில் வைத்தனர். ஆலயம் மின் விளக்குகளால் அலங்கரித்து ஜொலித்தது. புனித லூர்து மாதா ஆலயம் வில்லியனூர் புனித லூர்து மாதா ஆலயத்தில், பங்கு தந்தை ரிச்சர்டு தலைமையில் 11:45 மணிக்கு சிறப்பு திருப்பலியுடன் 12:00 மணிக்கு பிறந்த குழந்தை ஏசுவை குடிலில் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் ஆலய உதவி பங்கு தந்தை ராபர்ட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புனித விண்ணேற்பு அன்னை ஆலயம்: நெல்லித்தோப்பு புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் நடந்த விழாவில், ஆலய பங்கு தந்தை குழந்தைசாமி மற்றும் உதவி பங்கு தந்தை ஜான்பால்ராஜ் தலைமையில் 12:00 மணியளவில் குழந்தை ஏசுவின் சொரூபம் குடிலில் வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சென்னையை சேர்ந்த அருள்புஷ்பம் அடிகளார் தலைமையில் சிறப்பு திருப்பலி 1:30 மணி வரையில் நடந்தது.

பாத்திமா அன்னை ஆலயம்: தட்டாஞ்சாவடி புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில், இரவு 11:45 மணிக்கு, சிறப்பு திருப்பலி துவங்கியது. நள்ளிரவு 12:00 மணிக்கு, ஆலய பங்கு தந்தை லாரன்ஸ், குழந்தை ஏசுவின் சொரூபத்தை ஏந்தி வந்து, குடிலில் வைத்தார். நிகழ்ச்சியில் முதல்வர் ரங்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ரெட்டியார்பாளையம் புனித அந்திரேயர் ஆலயம், ரெயின்போ நகர் புனித ஜான்மரி வியான்னி ஆலயம் உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று நள்ளிரவு கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலிகள் நடந்தன. கடும் பனியையும் பொருட்படுத்தாமல், சிறப்பு திருப்பலியில் திரளான பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar