Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூமீஸ்வரர் கோவிலில் ஆராய்ச்சியாளர் ... திருப்பதி ஏழுமலையான் உண்டியல் வருமானம் உயர்வு! திருப்பதி ஏழுமலையான் உண்டியல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி பகுதிகளில் கிறிஸ்துமஸ் கோலாகலம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

25 டிச
2014
12:12

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதிகளில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக பெ ாள்ளாச்சியில் உள்ள ரோமன் கத்தோலிக், சி.எஸ்.ஐ., பெந்தகொஸ்தே மற்றும் பிராட்டஸ்டண்ட் உள்ளிட்ட கிறிஸ்துவ பிரிவுகளின் ÷ தவாலயங்களில் கடந்த ஒரு வார காலமாகவே சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. கிறிஸ்துவ மக்களின் வீடுகளிலும் புத்தாடைகள்,  கிறிஸ்துமஸ் கேக் உள்ளிட்ட தடபுடல் ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. மேலும், அலங்கார மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட விதவிதமான  கிறிஸ்துமஸ் குடில்களும் அமைக்கப்பட்டன. பண்டிகைக்காக வெளியூர்களில் பணியாற்றி வரும் கிறிஸ்தவர்களும் சொந்த ஊர்களுக்கு திரும்பி னர். நேற்று மாலை முதல் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் களை கட்ட துவங்கின. நகரின் வீதிகளில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந் தவரை இசை மற்றும் பாடல்களுடன் ஊர்வலமாக அழைத்து வந்தனர். இரவு 9.00 மணி முதலே சர்ச்களில் மக்கள் கூட்டம் வரத்துவங்கியது. 11.00  மணிக்கு மேல் மக்கள் கூட்டம் அதிகரித்தது. முன்னிரவு முதல் தொடர்ந்து கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன.  ‘இக்கொண்டாட்டம்  இன்று முழுக்க தொடரும்; வரும் ஜனவரி 1ம் தேதி ஆங்கில புத்தாண்டு பிறப்பு வரை பண்டிகை கொண்டாட்டங்கள் இருக்கும்’ என கிறிஸ்துவ  மக்கள் தெரிவித்தனர். வால்பாறை ண கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி, வால்பாறையில் உள்ள சி.எஸ்.ஐ., ஆர்.சி., சென்லுக், கருமலை மாதா  ஆலயம், ரொட்டிக்கடை புனிதவனத்து சின்னப்பர் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று காலை சிறப்பு ஜெபவழிபாடும்,  சிறப்பு பாடற்பலியும் நடக்கிறது. இதையொட்டி, நகரில் உள்ள சர்ச்களில் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடைகளில்  ஸ்டார் விற்பனையும்  சூடுபிடித்துள்ளது. கிறிஸ்துமஸ் விழாவையொட்டி அனைத்துசர்ச்களும், மின் விளக்கால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar