Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் ... புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசி வழிபாடு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புத்தாண்டுடன் வைகுண்ட ஏகாதசி; கோவில்களில் காத்திருந்து தரிசனம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜன
2015
05:01

ஈரோடு : வைகுண்ட ஏகாதசி மற்றும் புத்தாண்டை முன்னிட்டு, அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.

ஈரோடு, கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா, 22ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் வரை பகல் பத்து உற்சவம் நடந்தது. 31ம் தேதி மாலை, ஐந்து மணிக்கு மேல் சுவாமி, மோகினி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.நேற்று அதிகாலை, 2.45 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை, திருவெம்பாவை படித்து, ஸ்வாமிக்கு திருமஞ்சனமும், தீபாராதனையும் நடந்தது. பின், வேதமந்திரங்கள் முழங்க ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக கஸ்தூரி அரங்கநாதர், பக்தர்கள் கூட்டத்துக்கு இடையே, சொர்க்க வாசலை கடந்தார். அதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சொர்க்க வாசலை (பரமபத வாசலை) கடந்து வழிபட்டனர்.பின், ஸ்வாமி வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. நேற்று முதல் இராப்பத்து உற்சவம் துவங்கியது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று காலை, ஆறு மணி முதல் நள்ளிரவு இரண்டு மணி வரை இன்னிசை கச்சேரி நடந்தது.

தினமும் ஸ்வாமிக்கு முத்தங்கி சேவை நடக்கிறது. சொர்க்க வாசல் திறப்பு தரிசனத்துக்காக, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்தனர். மேலும், ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில், திண்டல் வேலாயுதஸ்வாமி கோவில், ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், பவானி சங்கமேஸ்வரர் கோவில், பண்ணாரி மாரியம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.கடந்தாண்டு, 31ம் தேதி இரவு எஸ்.பி., அலுவலகம் அருகே புத்தாண்டு பிறப்பை கொண்டாட, பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்தனர்.

கொண்டாட்டத்தின் போது வாலிபர்களுக்கு இடையே, அவ்வப்போது ரகளை நடந்தது.ஈரோடு எஸ்.பி., சிபி சக்கரவர்த்தியும், சீருடையின்றி ப.செ.பார்க் சிக்னல் அருகே கேக் வெட்டி, புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தார். அவருடன் ஏ.டி.எஸ். பி.,க்கள் மற்றும் டி.எஸ்.பி., கள் பலர் உடன் இருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவு நேர ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
கடலுார்: முத்தாலம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலமாக நடந்தது.கடலுார், திருப்பாதிரிப்புலியூர் ... மேலும்
 
temple news
கோவை; மாசி மாத பிறப்பு மற்றும் ஏகாதசி தினத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி ... மேலும்
 
temple news
கொடைக்கானல்; கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் அரோகரா கோஷத்துடன் தைப்பூச தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar