Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் தெப்பத் திருவிழா ... அங்காளம்மன் கோவிலில் தீச்செட்டி ஏந்தி ஊர்வலம்! அங்காளம்மன் கோவிலில் தீச்செட்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோலைமலை முருகன் கோயிலில் முதல்முறையாக பிரம்மோற்சவ திருவிழா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

22 ஜன
2015
11:01

அழகர்கோவில் : அழகர்கோவில் சோலைமலை முருகன் கோயிலில் முதல் முறையாக 10 நாட்கள் நடக்கும் பிரம்மோற்சவ திருவிழா ஜன.25ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

சோலைமலை முருகன் கோயில் பல நுாறு ஆண்டுகளுக்கு முன் ஆதிவேல் வடிவில் மலை மீது அமையப்பெற்றது. 1960ல் சிறிய கோயில் அமைத்து வள்ளி, தெய்வானையுடன், சுப்பிரமணிய சுவாமி பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதுமுதல் கோயில் சார்பில் கார்த்திகை, பங்குனி உத்திரம், தைப்பூசம், வைகாசி விசாகம் என ஒரு நாள் விழாவும், 7 நாள் கந்தசஷ்டி திருவிழாவும் நடக்கிறது.கடந்த ஆண்டு ரூ.5 கோடியில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பின் தக்கார் வெங்கடாசலத்தின் முயற்சியால் செம்பு தகடினால் ஆன பழைய கொடிமரம், ரூ.25 லட்சம் மதிப்பில் புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்தனர். தற்போது ரூ.ஒரு கோடி மதிப்பில் கோயில் வலது பக்கம் சஷ்டி மண்டபம் அமைக்கும் பணி முடிந்துள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள மூலஸ்தானத்தில் நாளை(ஜன. 23) மகாகணபதி, சண்முகர், உற்சவ சுவாமிகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

இந்த ஆண்டு முதல் கோயிலில் முதல் முறையாக 10 நாட்கள் நடக்கும் பிரம்மோற்சவ திருவிழா ஜன.25ல் காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தினமும் காலை, மாலையில் சுவாமிக்கு பல்வேறு அபிஷேகம், ஆராதனைகள் முடிந்து சுவாமி புறப்பாடு நடக்கிறது. ஒன்பதாம் விழாவாக பிப்.2ல் தேரோட்டமும், மறுநாள் காலை 10.30 மணிக்கு தீர்த்தவாரி உற்சவமும் நடக்கிறது. நிர்வாக அதிகாரி வரதராஜன் கூறியதாவது:அனைத்து கோயில்களிலும் 10 நாள் திருவிழா நடக்கிறது. சோலைமலை முருகன் கோயிலில் இதுபோன்ற விழா நடக்கவில்லையே என பக்தர்களிடம் ஏக்கம் இருந்தது. தற்போது சஷ்டி மண்டபம் அமைக்கப்பட்டதால் முதல்முறையாக திருவிழா நடக்கிறது. கோயிலில் தேரோட்டம் நடத்துவதற்கு இடம் இல்லை. அதனால் பிப். 2ல் தங்கத் தேரோட்டம் நடக்கிறது. பக்தர்கள் அனைவரும் தங்கத் தேரை வடம் பிடித்து இழுக்கலாம், என்றார்.ஏற்பாடுகளை கோயில் பட்டர் பாலகணபதி தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar