நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் வேணுகோபாலசுவாமி கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. நெல்லிக்குப்பம் ருக்மணி சத்யபாமா சமேத ÷ வணுகோபால சுவாமி கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் தீபாராதனை நடந்தது. ருக்மணி சத்யபாமா ச÷ மதராய் வேணுகோபால சுவாமி ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஐயப்பன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.