Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நெல்லையப்பர் கோயிலில் தைப்பூச விழா ... ஹஜ் பயணத்துக்கு பாஸ்போர்ட் முகாம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆல்கொண்டமால் கோவிலுக்கு கோசாலை ஏற்படுத்த பக்தர்கள் எதிர்பார்ப்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2015
11:01

உடுமலை: "ஆல்கொண்டமால் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கப்படும் கால்நடைகளை பராமரிக்க, கோசாலை ஏற்படுத்த வேண்டும், என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உடுமலை சோமவாரப்பட்டியில், பிரசித்தி பெற்ற ஆல்கொண்டமால் கோவில் உள்ளது. பொங்கலன்று ஈன்றெடுக்கப்படும் கன்றுகள், இக்கோவிலுக்கு சொந்தம் என்ற நம்பிக்கை, அப்பகுதியினர் இடையே உள்ளது. ஆண்டுதோறும் பொங்கலையொட்டி நடைபெறும் இத்திருவிழாவில், கன்றுகள் தானமாக தரப்படுகின்றன. கால்நடை வளம் பெருக வேண்டி, ஆடு, சேவல் உள்ளிட்டவற்றையும், பக்தர்கள் காணிக்கையாக வழங்குகின்றனர். கோவிலுக்கு வழங்கப்படும் கால் நடைகளை, பிற மாவட்டங்களில் உள்ள கோசாலைக்கு, இந்து சமய அறநிலையத்துறையினர் அனுப்புகின்றனர். இச்செலவுக்காக, தானம் வழங்கும் பக்தர்களிடம், 1,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டணம் செலுத்தும் முறையால் அதிருப்தியடையும் பக்தர்கள், கன்றுகளை விலைக்கு விற்று, அதில் கிடைக்கும் தொகையை, உண்டியலில் செலுத்துகின்றனர். இருப்பினும், ஆண்டுதோறும் சராசரியாக 50க்கும் மேற்பட்ட கால்நடைகள், தானமாக வழங்கப்படுகின்றன. கோவிலுக்கு தானமாக வழங்கப்படும் கன்றுகளை, அங்கேயே பரா மரிக்க வேண்டும். இதற்கு கோவில் அருகில் கோசாலை துவக்க வேண்டும் என்பது பக்தர்கள் எதிர்பார்ப்பு. பக்தர்கள் கூறுகையில், "தானமாக வழங்கப்படும் கால்நடைகளை பராமரிக்க தேவையான தீவனப்புல், தண்ணீர் போன்றவற்றை, கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் இருந்து எளிதாக பெற முடியும். கோசாலை அமைப்பது, இத்தலத்தின் சிறப்பை மேலும் அதிகரிக்கச் செய்யும், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar