Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உறங்கி எழுந்ததும் உள்ளங்கையைப் ... ரஜனி ராஜா கோவிலில் குடமுழுக்கு விழா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திவ்ய தேசங்களின் பாசுரங்களின் உட்பொருளுக்கு எளிமையான தமிழில் பாடல் வடிவில் சிடி வெளியீடு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2015
02:01

மதுரை: மதுரை, ஸ்ரீகாயத்ரி நாராயண் சபாவின் மூலம், 108ல் ஆழ்வார்களின் மனம் என்னும் பொது தலைப்பின் கீழ் 1) திருமெய்யம் திருத்தண்கால் வடபெருங்கோயிலுடையான் என்று 3திவ்ய தேசங்களுக்கும் ஆழ்வார் பாசுர கருத்துக்களுக்கு உள்ளுறைப் பொருளை இக்காலத்து தமிழில் எளிமையாக கவிஞர் கூடல் என். ராகவன் பாடல் எழுதி மெல்லிசையில் வெளியிட்டுள்ளார். இது முதல் வெளியீடு. இதில் திருமெய்யப் பெருமானுக்குரிய பாசுரக்கருத்துகள் மட்டுமல்லாமல் அத்திவ்யதேசத்தின் ஸ்தல, புராண வரலாறுகள் முழுமையாக, அற்புதமான பாடல்களாக கொடுக்கப்பட்டுள்ளது.

Default Image
Next News

திருத்தண்கால் மட்டுமல்லாமல், 7 ஸ்தல வரலாறான வாணாசுர வதமும், உஷை திருமணமும் மெய்சிலிர்க்க வைக்கும், இசையில் தரப்பட்டுள்ளது. வடபெருங்கோயிலுடையான் திவ்ய தேசத்திற்கு ஆண்டாளின் அவதார மகிமை, அப்பெருமானுடனுண்டான காதல் அவனுக்கு செய்த கைங்கரியங்கள், மார்கழி திருப்பாவை நோன்பு, திருவரங்கன் மணக்க கனவுகண்டது, அவனையே அடைந்தது அருமையான பாடலாக தந்துள்ளார்.

2) இரண்டாவது வெளியீடு: நண்ணுறு வாசக மாலை என்னும் ஸ்ரீசுக்தி பீஷ்மர் ஸ்ரீமந் நாராயணன் விஷ்ணு ஸஹஸ்ர நாமம் என்ற நாமாவளியில் ஸ்தோத்திரம் செய்தார். அதுபோல் ‘நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணாநரனே‘ என்று கோதை ஆண்டாளின் பாசுர வரிகளின்படியில் அரனின் ஆண்டாள் திருமாலை திருப்பாவையிலும், நாச்சியார் திருமொழியிலும் சொன்ன திரு நாமங்களை (உதாரணத்திற்கு நந்த கோபன் குமாரன், யசோதை இளஞ்சிங்கம், மனத்துக்கினியான்.., அப்படியே எடுத்து நமோ நாராயணாய என்று ஒரு ஸ்ரீ சுக்தியை உருவாக்கியுள்ளார். இதன் பல ஸ்ருதி (பயன்) யாக ஆண்டாள் சொன்ன பயன்களையே வைத்துள்ளார். நண்ணுறு வாசகமாலை என்றே ஆண்டாளும் இதற்கு பெயரிட்டுள்ளாள்.

சீர்காழிக்கு பக்கத்தில் உள்ளது திருநாங்கூர் திவ்யதேசம். திருமங்கையாழ்வார் அவதாரம் செய்த குறையலூர் உள்ள திவ்யதேசம். திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 11 திவ்யதேசங்கள் திருநாங்கூர். அங்கே தை அமாவாசைக்கு மறுநாள் நடக்கும் 11 கருட சேவைத் திருவிழா உலக பிரசித்திப் பெற்ற திருவிழா. அவ்விழாவில் அண்ணன் பெருமாள் கோயில் கலியன் ஒலிமாலை என்னும் அமைப்பின் 14வது மாநாட்டில் கவிஞர் கூடல் என். ராகவன், ஆசாரியர் அடிப்பொடி, அவர்களின் மகள் காயத்ரி ரங்கஸ்ரீ மூவருக்கும் ‘வைணவ ரத்னா‘ என்னும் விருது வழங்கப் பெற்றது. அவ்விழாவின் ஒரு அங்கமாக 22.1.2015 அன்று காலை  ஏசிடிக்களும் வெளியிடப்பட்டுள்ளது. முதல் பிரதியினை வைணவச் செம்மல் வித்வான். கு. அரங்க நாதாச்சாரியர் ஸ்வாமி, வரிச்சுக்குடி அவர்கள் பெற்றுக் கொண்டனர்.

இந்த ஏசிடிக்கள் வெளியிடுவதற்கு முன்பாக மதுரை கூடலழகர் சன்னிதி  வடகரை திருவேங்கடமுடையான், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் எண்ணெய் காப்பு உற்சவத்திலும், ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம் வரதராஜன் திருவடிகளிலும் சமர்ப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. விழாவின் முதல் நாள் ( 21.1.2015) மாலை  7மணி அளவில் ஆர். காயத்ரி ரங்கஸ்ரீ பிரபந்த பாடல்களுக்கு பரதநாட்டியம் ஆடினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: திருநாவாயா பாரதப்புழா நதியில் நடக்கும் கும்பமேளாவில், இன்று முத்தன் மற்றும் முத்திக்கு ... மேலும்
 
temple news
திருவாரூர்: மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.திருவாரூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் ஓமக்குளத்தில் உள்ள நந்தனார் மடத்தில், திருநாளைப்போவார் என்கிற ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரமமோற்சவத்தில் நடக்கும் தெப்பல் திருவிழாவை ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பாலசுப்ரமணியர் கோவிலில் தை கிருத்திகை விழாவில் வள்ளி தேவசேனா சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar