Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணியில் தை கிருத்திகை விழா: 75 ... புத்துணர்வுடன் திரும்பி வந்த ராமேஸ்வரம் ராமலெட்சுமி! புத்துணர்வுடன் திரும்பி வந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெல்லையப்பர் கோயிலில் நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜன
2015
10:01

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் நேற்று நடந்தது. நெல்லையப்பர், காந்திமதியம்மன் கோயிலில் நடக்கும் முக்கிய விழாக்களில் ஒன்றான தைப்பூச விழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கோயிலில் தல புராணம் உருவாக காரணமான, நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் நேற்று காலை நடந்தது.

Default Image
Next News

முன்னொரு காலத்தில் வேதபட்டர் என்பவர் பொதுமக்களிடம் சேகரித்த, நெல் மணிகளை சுவாமிக்கு அமுது படைப்பதற்காக, காயப்போட்டிருந்தார். தாமிரபரணிக்கு குளிக்கச்சென்றுவிட்டு திரும்பும்போது மழை பெய்தது. அந்த பகுதி முழுவதும் மழை பெய்திருந்தது. ஆனால் காயப்போட்டிருந்த நெல் மீது மழை நீர் விழாமல் சுவாமியே வேலியிட்டு காத்திருந்தது போல இருந்தது. இதனை வேதபட்டர், மன்னரை அழைத்து காண்பித்தார். அப்போது முதல் இந்த தலம், திருநெல்வேலியானது. நெல்லையப்பர் சன்னதியில் நந்தி முன்பாக நடந்த நிகழ்வில் நெல்குவித்து வைத்து வழிபாடு செய்யப்பட்டது. தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். இரவு பஞ்சமூர்த்திகளுடன் சுவாமி அம்பாள் வீதியுலா நடந்தது. வரும் பிப்.,3ம் தேதி தைப்பூச தீர்த்தவாரி விழா கைலாசபுரம் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள சிந்துபூந்துறை மண்டபத்தில் நடக்கிறது. பிப்.,4ம் தேதி இரவு ஏழு மணியளவில் நெல்லையப்பர் கோயில் சவுந்திரசபா மண்டபத்தில் நடராஜரின் திருநடனம் நடக்கிறது. ஐந்தாம் தேதி நெல்லையப்பர் கோயிலின், அலங்கரிக்கப்பட்ட வெளித்தெப்பத்தில் பஞ்சமூர்த்திகளுடன் தெப்பத்திருவிழா நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar