Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கைலாசநாதர் கோவிலில் ரத சப்தமி விழா! சிவன்மலை தைப்பூச தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்! சிவன்மலை தைப்பூச தேர்த்திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழமை வாய்ந்த சிறுவஞ்சூர் திருவாலீஸ்வரர் கோவில் சீரழிவு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

29 ஜன
2015
11:01

சிறுவஞ்சூர்: இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளின் கண்காணிப்பு இல்லாததால், பழமை வாய்ந்த சிறுவஞ்சூர் திருவாலீஸ்வரர் கோவில் சிதிலமடைந்து வருகிறது. இதை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். படப்பையிலிருந்து, 8 கி.மீ., தொலைவில் சிறுவஞ்சூர் கிராமத்தில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், பழமை வாய்ந்த திருவாலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலின் கருவறை முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமாக, 10 ஏக்கர் நிலங்களும் உள்ளன. அவ்வாறு இருப்பினும் இக்கோவில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக பராமரிப்பு இன்றியும்; பூஜைகளின்றியும் சீரழிந்து காணப்படுகிறது. இதை கண்காணித்து சீரமைக்க வேண்டிய, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, அப்பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் கூறுகையில், கோவில் நிலத்தில் கிடைக்கும் வருவாய் மூலம் கோவிலை சீரமைத்தால் போதும். இதை எந்த கோவில் நிர்வாக அதிகாரிகளும் கடைபிடிப்பதில்லை என்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar