Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தைப்பூசத்தையொட்டி 3ம் தேதி மதுபானக் ... மாசாணியம்மன் கோவில் குண்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அறம் வளர்த்த மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா துவக்கம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜன
2015
11:01

குறிச்சி: கோவை, குனியமுத்துாரில், புதுப்பிக்கப்பட்ட நுாறாண்டுகள் பழமையான அறம் வளர்த்த மாரியம்மன் மற்றும் விநாயகர் கோவில்  கும்பாபிஷேக விழா, வரும், 1ம் தேதி நடக்கிறது. குனியமுத்துாரில், சுண்டக்காமுத்துார் செல்லும் ரோட்டில் அமைந்துள்ளது, நு ாறாண்டுகளுக்கும் மேல் பழமையான அறம் வளர்த்த மாரியம்மன் மற்றும் விநாயகர் கோவில். ஒவ்வொரு ஆண்டும், சித்திரை மாதம், இங்கு,  மாவிளக்கு வழிபாடு விழா நடக்கும். தற்போது, 1.5 கோடி ரூபாய் மதிப்பில் கோவில் புனரமைக்கப்பட்டது. மகா மண்டபம், அர்த்த மண்டபம், கர்ப்ப  கிரகத்துடன் அமைக்கப்பட்டுள்ள இக்கோவிலில், மூன்று நிலை கோபுரமும், ஏழு நிலைகளில் முழுக்கற்களால் ஆன, சிலைகளும் வடிவமைக்கப் பட்டுள்ளன. திசைக்கு இரண்டு என, நான்கு திசைகளுக்கும், எட்டு லட்சுமிகள் வைக்கப்பட்டுள்ளன. பணிகள் நிறைவடைந்த நிலையில், கும்பாபி÷ ஷக விழா, இன்று காலை, 6:00 மணிக்கு மங்கள இசை, கணபதி பூஜையுடன் துவங்குகிறது. மாலை, 5:00 மணிக்கு, முதல் கால யாக பூஜை நடக்கிறது.  31ம் தேதி காலை, 8:30 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை, விசேஷசாந்தி, வேதபாராயணம் ஆகியவையும், மாலை, 5:00 மணிக்கு, மூன்றாம் கால  யாக பூஜையும் நடக்கின்றன. 6:00 முதல் 7:30 மணிக்குள், விமான கலசம் வைத்தல், யந்திரஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதலும்  நடக்கின்றன. 1ம் தேதி காலை, 6:00 மணிக்கு, மங்கள இசை, நான்காம் கால யாக பூஜை, நாடிசந்தானம், ஸ்பர்சாஹுதி, தீபாராதனையும், 9:00  மணிக்கு, கலசங்கள் கோவிலை வலம் வருதலும் நடக்கின்றன. 9:15 முதல் 9:30 மணிக்குள் அறம் வளர்த்த மாரியம்மன் விமான கும்பாபிஷேகமும்,  9:30 முதல் 10:00 மணிக்குள் அறம் வளர்த்த மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு( வினாயகர், முருகன், கருப்பராயன்) மகா கும்பாபி÷ ஷகமும் நடக்கின்றன. பிப்., 2ம் தேதி மாலை, 6:00 மணிக்கு, அம்மன் வீதி உலா நடக்கிறது. தொடர்ந்து, 48 நாட்கள் மண்டல பூஜை நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar