Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நன்னாடு கோயிலில் மகா கும்பாபிஷேகம் பழநி கோயில் உண்டியல் வசூல்  1 கோடி 21 லட்சம்! பழநி கோயில் உண்டியல் வசூல் 1 கோடி 21 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அமர்நாத் புனித யாத்திரை 2.20 லட்சம் பேர் முன்பதிவு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2011
10:06

ஜம்மு:இமயமலையில் அமர்நாத் குகையில் உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க 2.20 லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.காஷ்மீர் மாநிலத்தில் இமயமலையில், 13 ஆயிரத்து 500 அடி உயரத்தில் அமர்நாத் குகை உள்ளது. இந்த குகையில், ஒவ்வொரு ஆண்டும் இயற்கையிலேயே உருவாகும் பனிலிங்கத்தை, நாடு முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். இந்தாண்டு அமர்நாத் புனித யாத்திரைக்கான முன்பதிவு கடந்த மாதம் 10ம் தேதி துவங்கியது. முன்பதிவு மையங்கள் மற்றும் இணையதளம் வழியாக இதுவரை, 2 லட்சத்து 19 ஆயிரத்து 190 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து, அமர்நாத் யாத்திரை பதிவுக்கான பொறுப்பு அதிகாரியும், ஜம்மு- காஷ்மீர் வங்கியின் துணைத் தலைவருமான அப்துல் அமீது கூறியதாவது: அமர்நாத் புனித யாத்திரைக்காக 121 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, இணையதளம் வாயிலாகவும் முன்பதிவு செய்யலாம். இதுவரை நாடு முழுவதிலுமிருந்து 2 லட்சத்து 19 ஆயிரத்து 190 பேர் முன்பதிவு செய்துள்ளனர். பனிலிங்கத்தை தரிசிப்பதற்கான யாத்திரையில், பகல்காம் வழியாக பயணம் மேற்கொள்ள, 1 லட்சத்து 10 ஆயிரத்து 172 பேரும், பாதல் வழியாக பயணம் மேற்கொள்ள, 1 லட்சத்து 9,018 பேரும் பதிவு செய்துள்ளனர். இம்மாதம் 29ம் தேதி வரை முன்பதிவு நடக்கும். ஆகஸ்ட் 13ம் தேதி அமர்நாத் யாத்திரை துவங்குகிறது.இவ்வாறு அப்துல் அமீது கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பவனம்: திருப்புவனத்தில் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலின் 128வது சித்திரை பெருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் ஸ்ரீ பத்மாவதி சீனிவாச பரிணய உற்சவங்கள் (திருமணத் திருவிழா) மிகச் சிறப்பான ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவில், உற்சவர் பெருமாள் சிங்க ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் பஞ்சமூர்த்திகள் 63 நாயன்மார்களுக்கு காட்சியளிக்கும் வைபவம் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை சித்திரை திருவிழாவின் 6ம் நாள் மண்டகப்படியான இன்று சமணர்கள் கழுவேற்றம் நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar