Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலை கோவிலில் ரூ.180 கோடி மாயம்! ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் கட்ட பூமி பூஜை! ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகாலிங்க ஸ்வாமி கோவிலில் மார்ச் 5ல் தேர் வெள்ளோட்டம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 பிப்
2015
11:02

கும்பகோணம் : திருவிடைமருதூரில், 100 ஆண்டுகளுக்கு பின் மகாலிங்க ஸ்வாமி கோவிலில், புதிய முருகன் தேர் வெள்ளோட்டம் மார்ச், 5ம் தேதி நடக்கிறது.

திருவிடைமருதூர் மகாலிங்க ஸ்வாமி கோயிலில் தைப்பூச உற்சவத்தில், 5 தேரோட்டம் நடைபெறும். 80 ஆண்டுகளுக்கு மேலாக தேரோட்டம் தடைப்பட்ட நிலையில் பழைய தேர்களும், தேர் மண்டபங்களும் மிகவும் சிதிலமடைந்தன. கடந்த, 2007ம் ஆண்டு, கோவை ஆனைக்கட்டி ஆர்ஷ வித்யாகுருகுலம் ஸ்தாபகர் தயானந்த சரஸ்வதி சுவாமிகள் மற்றும் திருவாவடுதுறை ஆதீனம் வழிகாட்டலின் பேரில், தேர் திருப்பணி கமிட்டி அமைக்கப்பட்டு, 5 தேர் மண்டபங்கள் முழுமையாக பழமை மாறாமல் திருப்பணி செய்யப்பட்டது. அதிக பொருட்செலவில், 400 டன் எடையில் ஸ்வாமி தேர் செய்யப்பட்டது. காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஏற்பாட்டில் அம்பாள் தேர் அழகுற வடிவமைக்கப்பட்டது.

தற்போது, தொழிலதிபர் பொள்ளாட்சி மகாலிங்கம் குடும்பத்தினரின் நிதி ஆதாரத்தின் அடிப்படையில், கோவில் முருகன் தேர் திருப்பணி நடந்து வருகிறது. ஸ்தபதி காரைக்குடி ராதாகிருஷ்ணன் தலைமையில், தேர் வடிவமைக்கும் பணி நடந்து வருகிறது. இத்தேர் திருப்பணி முடிவடையும் நிலையில், 100 ஆண்டுகளுக்கு பிறகு மார்ச், 5ம் தேதி காலை, 7.30 மணிக்கு புதிய தேர் வெள்ளோட்டம் நடக்கிறது.இதில், திருவாவடுதுறை ஆதீனம், 24வது குருமகாசன்னிதானம் அம்பலவாணதேசிக பரமாச்சாரிய சுவாமிகள், தயானந்த சரஸ்வதி சுவாமிகள், சக்தி குழுமம் சேர்மன் மாணிக்கம் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம், மகாலிங்க சேவா டிரஸ்ட், ஆன்மீக பேரவையினர் செய்துள்ளனர்.

வரும், 2016ம் ஆண்டு மகாமக பெருவிழாவிற்கு முன், தைப்பூசத்திருவிழாவில் விநாயகர், சண்டிகேஸ்வரர் தேர்களும் புதிதாக செய்யப்பட்டு, ஓடும் வகையில் பணிகள் நடந்து வருவதாக, தேர் திருப்பணி கமிட்டியினர் தெரிவித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar