Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாசி சிவராத்திரி: ராமேஸ்வரம் கோயில் ... ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி கோலாகலம்! ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அண்ணாமலையார் கோவிலில்மஹாசிவராத்திரி லட்ச தீப விழா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 பிப்
2015
11:02

திருவண்ணாமலை:திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு லட்ச தீப விழா சிறப்பாக நடந்தது.மஹா சிவராத்திரி முன்னிட்டு, அண்ணாமலையார் கோவிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையாருக்கும், உண்ணாமலையம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம், தங்க கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

Default Image
Next News

அதிகாலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை 108 சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு மலர்களால் அண்ணாமலையாருக்கு லட்சார்ச்சனை செய்தனர். மாலை 6 மணிக்கு, அண்ணாமலையார் கோவிலில் ராஜகோபுரம் முதல் கருவறை வரை வண்ணங்களால் லிங்கபைரவி, இடைக்காட்டு சித்தர், அர்த்தநாரீஸ்வரர், சிவபெருமான் பார்வதி நடனம்,108 லிங்கங்கங்களால் அலங்கரிக்கப்பட்டும், ஓம் நமச்சிவாய உருவம் உள்ளவாறு ஓவியம் வரையப்பட்டு, அதை சுற்றி லட்ச தீபம் ஏற்றப்பட்டன.

மேலும் பிரம்ம தீர்த்தத்தை சுற்றி தீபம் ஏற்றியதும் தீப ஒளியில் கோவில் முழுவதும் வண்ணமயமாக காட்சியளித்தது பக்தர்களை கவர்ந்தது.நள்ளிரவு 12 மணி அளவில், ஸ்வாமி கருவறையில் மேற்கு திசையில் அமைந்துள்ள லிங்கோத்பவருக்கு தாழம்பு சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. கோவில் கலையரங்கத்தில், மாலை 6 மணி முதல் விடிய விடிய தேவார பாடல்கள், இன்னிசை, பரதநாட்டியம், பக்தி பாடல்கள் பாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.ராஜகோபுரம் எதிரில் காலை முதல் மாலை வரை இறைவனை போற்றி, 108 தவில் நாதஸ்வர கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடந்தது. விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீப மேற்றி அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனை வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவபெருமான் நவராத்திரி விரதத்தை கடைப்பிடித்தே, திரிபுர தகனம் செய்தார் என்று புராணங்களில் செய்தி ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 
temple news
பல்லடம்: ஆறாக்குளம் கிராமத்தில், அம்மா சோறு, ஆத்தா சோறு என்று, மழை வேண்டி பெண்கள் மழைச்சோறு எடுத்து ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: கவுண்டம்பாளையம் சிவ நகர் சிவாலயத்தில், 17ம் ஆண்டு விழா மற்றும் அமாவாசையை ஒட்டி மகா சிவ 108 ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மதுரை ஐராவதநல்லூர் ஓம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar