Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகா சிவராத்திரி விழா கோயில்களில் ... கர்நாடக ஸ்ரீமலை மாதேஸ்வரன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி முருகனுக்கு செலுத்தினாலும் வீடுவரை தொடரும் காவடி பயணம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 பிப்
2015
02:02

காரைக்குடி:ஏற்றிய காவடியை பழநி முருகனுக்கு செலுத்தினாலும், வீடு திரும்பும் வரை நடை பயணமாகவே திரும்ப கொண்டு வருகின்றனர் செட்டிநாட்டு நகரத்தார்கள்.

நகரத்தார்கள் வழிபடும் கோயில்கள் சிவன் கோயிலாக இருந்தாலும்,விரும்பி வழிபடும் தெய்வமாக முருகன் உள்ளார். தைப்பூச பழனி பாத யாத்திரை கடந்த 400 ஆண்டுகளாக நகரத்தாரால்மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேவகோட்டை, நெற்குப்பை, மேலைசிவபுரி ஊர்களிலிருந்து வேல் எடுத்து செல்லப்பட்டு, வழி நெடுகிலும் ஆராதனை செய்யப்படுகிறது. இந்த வேல் முன்னே செல்ல, காவடி எடுத்து செல்வோர் பின் தொடர்வர்.

காரைக்குடி மீனாட்சி சுந்தரம் கூறும்போது: தைப்பூச திருவிழாவின், முன்தின அஷ்டமி அன்று
நகரத்தார் காவடி கிளம்புவார்கள். ஆறுநாள் நடைபயணம். அதன்படி தைப்பூசத்தின் முதல்நாள் அன்னதான மடத்தை அடைவார்கள். அதற்கு அடுத்த நாள் ஆயில்யம். அடுத்த நாள் மகம். அன்று காவடி செலுத்துவார்கள். அதன்பிறகு இரண்டு நாள் அங்கு தங்கியிருந்து, அபிஷேகத்தில் பங்கேற்பார்கள். அதற்கு அடுத்தநாள் கிளம்பி, மூன்று நாளில் குன்றக்குடிக்கு வருவார்கள்.ஒரு முறை காவடியை தூக்கினால், அடுத்து பூஜை நடக்கும் இடத்தில் மட்டுமே கீழே வைக்க வேண்டும். கீழே வைக்கும் வரை தண்ணீர் குடிக்க கூடாது. தீபாராதனை காட்டிய பிறகே தண்ணீரோ, உணவோ சாப்பிட வேண்டும்.

காவடியை, நீராடிய பிறகே தூக்க வேண்டும். காவடி செலுத்த நேர்ந்து கொண்டால்,பாத யாத்திரை பயணம் முடிக்க, அவருக்கு குறைந்தது 20 நாட்களாகும். இங்கிருந்து பழநி சென்றுஅங்கிருந்து சொந்த ஊர் வரை என, மொத்தம் 308 கி.மீ.,இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது.கடந்த பிப்.5-ம் தேதி காவடி செலுத்தப்பட்டது. அங்கிருந்து 8-ம் தேதி கிளம்பி கடந்த 14-ம் தேதிபாதயாத்திரையாகவே ஊர் வந்து சேர்ந்தோம், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி, விநாயகருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கூரம்: கூரம் கிராமத்தில் உள்ள கூரத்தாழ்வான் கோவிலில் இன்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
விருதுநகர்; திருச்சுழி அருகே ஸ்ரீ ராமதேவர் சித்தர் பீடத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
கோவை;  காரமடை அருகேயுள்ள படியனூர் கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த அருள்மிகு பழநி ஆண்டவர் ... மேலும்
 
temple news
கம்பம்; காமயகவுண்டன்பட்டி ஸ்ரீ சுபத்ரா காளியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி ஆயிரத்தெட்டு விளக்கு பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar