Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிங்கம்புணரி ருத்ரகோடீஸ்வரர் ... தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிருந்தாவன் விதவை பெண்கள் ஹோலி கொண்டாட ஏற்பாடு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 பிப்
2015
12:02

லக்னோ: உத்தர பிரதேசத்தின் வாரணாசி மற்றும் பிருந்தாவன் நகரங்களில், மடங்களில் தங்கியுள்ள விதவைப் பெண்கள், முதல் முறையாக, ’ஹோலி’ பண்டிகையை கொண்டாட உள்ளனர். கணவனை இழந்த பெண்கள், விதவைகள் என அழைக்கப்படுகின்றனர். இத்தகையவர்கள், வண்ணப் புடவைகள் அணியக் கூடாது; நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்ளக் கூடாது என, காலம் காலமாக கட்டுப்படுத்தப்பட்டு வந்தனர். உ.பி., மற்றும் அதைச் சுற்றியுள்ள மாநிலங்களைச் சேர்ந்த விதவைப் பெண்கள், உத்தர பிரதேசத்தின் வாரணாசி மற்றும் பிருந்தாவன் நகர மடங்களில், ஆயிரக்கணக்கில் வாழ்ந்து வருகின்றனர். சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களாகக் கருதப்படும் அவர்களுக்கு, சமீபத்தில், புதுவாழ்வு கிடைத்தது. ’சுலப்’ என்ற தொண்டு நிறுவனம் சார்பில், அந்தப் பெண்கள், தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். அந்த வகையில், விதவைப் பெண்களை மேலும் கவுரவிக்கும் விதமாக, அவர்களை, ஹோலி பண்டிகை கொண்டாட, அந்த அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. இதன் மூலம், இத்தனை ஆண்டுகளாக மடங்களில் முடங்கிக் கிடந்த முதிய பெண்கள், வண்ணப் பொடிகளை ஒருவர் மீது மற்றொருவர் தூவி, மகிழ்ச்சியை வெளிப்படுத்த உள்ளனர். ஹோலி பண்டிகை, அடுத்த மாதம், 3ல் துவங்கி, 6ல் முடிவடைகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 30-ந்தேதியில் இருந்து ஏப் ரல் 1-ந்தேதி வரை 3 நாட் கள் வசந்த ... மேலும்
 
temple news
சென்னை: ‘பண்ணிசைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்குவதற்கு, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்’ என, மத்திய ... மேலும்
 
temple news
தி.நகர்: வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம், ஸ்ரீ கிருஷ்ண கான சபா, எஸ்.பி.எஸ்.கே.சி., டிரஸ்ட் ஆகியவை இணைந்து ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar