பெங்களூர் பிருந்தாவன் பகவான் சத்ய சாய் பாபா ஆசிரமத்தில் அதிருத்ர மகா யக்ஞம் கோலாகலம்!
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மார் 2015 10:03
பெங்களூர்: பிருந்தாவன் அதி ருத்ர மகா யாகம் மார்ச் 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாள் விழாவானது மார்ச் 1ம் தேதி காலை 9 மணிக்கு வேதமந்திரம் முழங்க சிறப்பாக தொடங்கியது.
விழாவில் அதிருத்ர மகா யாகத்தின் முக்கியதுவம், சிறப்பு பற்றியும் பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் முக்கியமான நிகழ்வுகள் பற்றிம் வி. சீனிவாசன், ஸ்ரீ சத்ய சாய் அறக்கட்டளையின் அறங்காவலர் உரையாற்றினார். பிற்பகல் 1530 மணிக்கு லிங்கம் மற்றும் பாபா உருவம் பல்லக்கில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்பு சாய் ரமேஷ் ஹாலில் வேதம் கோஷமிட விழா தொடங்கியது. பின்பு இசைக்கலைஞர்கள், மற்றும் மாணவர்கள் குழுக்களின் பஜனைகள் நடைபெற்றது.
விழாவில் சத்ய சாய் சாதனா டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணா அவர்கள் பேசும் போது பாபாவின் ஆன்மீக பாதையில் இளைஞர்கள் ஈடுபடுவதோடு பாபாவின் வழி நடக்க வேண்டும் என்று பேசினார். அடுத்து பேசிய சத்ய சாய் அறக்கட்டளையின் அறங்காவலர் கே .சக்ரவர்த்தி அவர்கள் அதிருத்ர மகா யாகம் பற்றியும் அதன் புனிதம் பற்றியும் பேசினார். சென்னையிலும், புட்டபர்த்தியிலும் பகவான் சத்ய சாய் பாபா இதைப் பெரிய அளவில் நடத்தி உலகையே வியப்பில் ஆழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சிறப்பு மிக்க இந்த யாகம் பெங்களூர், பிருந்தாவன் சாயி ரமேஷ் ஹாலில் மார்ச் 12ம் தேதி வரை நடைபெருகிறது.