Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news குருவாயூர் கிருஷ்ணர் கோவில் விழா ... புதைந்து வரும் பழமையான கோவில்! புதைந்து வரும் பழமையான கோவில்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புண்ணிய தீர்த்தங்கள் நிறைந்த புண்ணிய பூமி: ராமேஸ்வரம்!
எழுத்தின் அளவு:
புண்ணிய தீர்த்தங்கள் நிறைந்த புண்ணிய பூமி: ராமேஸ்வரம்!

பதிவு செய்த நாள்

03 மார்
2015
11:03

புண்ணிய தீர்த்தங்கள் நிறைந்த ராமேஸ்வரத்தில் கழிவுநீர் பிரச்னையால் சுகாதார சீர்கேடு மலிந்து வருகிறது. கழிவு நீரை அகற்றுவது சிறிய விஷயம் தான். அதை விட முக்கியம் மக்களின் மனநிலையை மாற்றுவதாகும். மக்களிடம் சமூக நலக்கருத்துகளை நேரடியாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் கொண்டு செல்வதில் வீதி நாடகங்கள் முக்கிய இடம் வகிக்கிறது.இங்கு வரும் புனித யாத்திரீகர்களிடம் சூழல் உணர்வையும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் முயற்சி எடுக்கப்படுகிறது. இது நம் ஊர்... இந்த ஊரின் சுத்தமும் சுகாதாரமும் நம் கடமை,’ என நினைக்கும் உள்ளூர் இளைஞர்கள் தான் இதை நடத்துகிறார்கள். இந்த தன்னார்வ தொண்டர்களுக்கு கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தினர் பயிற்சி அளிக்கின்றனர்.வீதி நாடகங்களின் மையகருவாக விளங்குவன:

சுகாதாரம் மு சுற்றுப்புற தூய்மை, மரங்களை பாதுகாப்பது, சுற்றுலா தலங்களை நன்னீர் தீர்த்தங்களை மாசுபடுத்தாமல் இருப்பது. எங்கு மிக மோசமாக மாசுபடுத்துதல் நடக்கிறதோ அந்த இடங்களிலும் கோயிலை சுற்றியுள்ள வீதிகளிலும் அக்னி தீர்த்தம், பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களிலும் நாடகங்கள் நடத்தப்படுகின்றன. ராமேஸ்வரத்தின் பசுமையும் தூய்மையும் மீண்டும் காக்கப்பட வேண்டும். பசுமை ராமேஸ்வர செயல்திட்டத்தின் மனமாற்ற செயல்பாடுகள் மக்களிடம் நேரடியாக தூய்மை ராமேஸ்வரத்தின் தேவையை கொண்டு செல்வது. இது உங்கள் ஊர். இங்கு ஒரு மணி நேரம் வந்து சடங்குகள் செய்து கோயிலை தரிசனம் செய்து போவதுடன் இந்த ஊருடனான உங்கள் உறவு முடிந்துவிடவில்லை. இங்கு உங்கள் தலைமுறைகள் வர வேண்டும். அதற்கு இந்த தீவினை பசுமையாக வைத்திருக்க நீங்கள் உதவ வேண்டும். இந்த தீவை பசுமையாக்க ஒரு மரக்கன்றை நீங்கள் நட்டால் அது உங்கள் தலைமுறைகளுக்கு புண்ணியமாக அமையும். கோவில் திருப்பணியின் மூலம் தேசவிடுதலை போராட்டத்தை பூலித்தேவரும் சேதுபதியும் திட்டமிட்டது போல இன்று ராமேஸ்வர இளைஞர்கள் பசுமை தூய்மை விடுதலை போராட்டத்தை வீதி நாடகங்கள் மூலம் நடத்துகின்றனர். அவர்களுடன் இணைவோம். -சுப்பிரமணியபிள்ளை, பேராசிரியர்(ஓய்வு)

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar