Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அக்ஷய திரிதியை முன்னிட்டு காலடியில் ... கோயிலை காக்க மனசில்லை.. சிவனுக்கு வந்த சோதனை! கோயிலை காக்க மனசில்லை.. சிவனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோதண்டராமர் கோவிலில் கிணறு கண்டுபிடிப்பு!
எழுத்தின் அளவு:
கோதண்டராமர் கோவிலில் கிணறு கண்டுபிடிப்பு!

பதிவு செய்த நாள்

16 மார்
2015
11:03

செஞ்சி: செஞ்சி கோதண்டராமர் கோவிலில்  மேலும் ஒரு பழைய கிணறு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி  சங்கராபரணி ஆற்றங்கரையில் தற்போது கோதண்டராமர் கோவில் என அழைக்கப்படும் 700 ஆண்டுகள் பழமையான பிரசன்ன வெங்கடேச பெரு மாள் கோவில் உள்ளது. இக்கோவில், ஆற்காடு நவாப் படையெடுப்பின் போது முற்றிலும் அழிக்கப்பட்டது. சில ஆண்டுகளாக கோதண்டராமர் சி லையை நிறுவி வழிபட்டு வருகின்றனர். திருப்பணிகள் செய்ய பாலயம் செய்துள்ளனர். இக்கோவிலின் கருவறைக்குப் பின்புறம் வடமேற்கில் சில  ஆண்டுகளுக்கு முன் ஒரு கிணறு கண்டு பிடித்து துார் வாரினர். ராஜ கோபுரத்திற்கு தெற்கே இருபது அடி துாரத்தில் மேலும் ஒரு கிணறு இருப்பதை  தற்போது கண்டு பிடித்துள்ளனர்.

சதுர வடிவில் செங்கற்களால் கட்டியிருந்த மண் திட்டை அறக்கட்டளை நிர்வாகி ரங்கராமானுஜம் மேற்பார்வையில் தொழிலாளர்கள் துார் வாரினர்.  இந்த திட்டு, வடக்கிலும், தெற்கிலும் மூன்று அடி அகலமும், கிழக்கிலும், மேற்கிலும் இரண்டே முக்கால் அடி அகலத்திலும் கிணறு இருப்பது தெரிந் தது. இந்தக் கிணற்றின் உள்ளே இறங்க சீரான இடைவெளியில் கல் பதித்துள்ளனர். கடந்த மூன்று நாட்களாக நடந்த துார் வாரும் பணியில் 18 அடி  ஆழத்திற்கு துார்வாரி உள்ளனர். இதன் பிறகு துார் வார முடியாத வகையில் பாறைகள் உள்ளது. கிணற்றின் அடியில் மேற்கிலும், வடக்கிலும் சுர ங்கம் போன்ற அமைப்பு உள்ளது.  நீண்ட பலகை கற்களை அடுக்கி வைத்து, இந்த சுரங்கம் போன்ற அமைப்பு உருவாக்கி உள்ளனர். தற்போது இ ருண்டு போய் உள்ள இந்தப் பகுதியில் மேற்கொண்டு மண்ணை அள்ளுவது தொழிலாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியதால் மேற்கொண்டு  பணிகளை செய்யாமல் நிறுத்தி உள்ளனர். இந்த கிணற்றை, கிணறாக மட்டும் பயன்படுத்தாமல் விலை உயர்ந்த பொருட்களை பாதுகாக்கும் ரகசிய  அறையாகவும் பயன்படுத்தி இருக்கலாம் என்ற கருத்து ஏற்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாளான இன்று சுப்பிரமணிய சுவாமி, ... மேலும்
 
temple news
பழநி; பழநி, கோயிலில் கந்தசஷ்டி விழாவில் திருக்கல்யாண உற்ஸவம் நடைபெற்றது.பழநி கோயிலில் காப்பு ... மேலும்
 
temple news
அவிநாசி; திருமுருகன் பூண்டி திருமுருகநாதர் கோவிலில் கந்த சஷ்டி நிறைவு விழாவான திருக்கல்யாண உற்சவம் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் கந்த சஷ்டி விழாநிறைவாக சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில், இன்று திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar