Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாளை கோயில் வடக்குச்சுவர் கட்டுமான ... கடையம் கோயிலில் சிவன் வடிவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பால்வண்ணநாத சுவாமி கோயிலில் ராஜகோபுர திருப்பணி தீவிரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2011
11:06

திருவேங்கடம்:கரிவலம்வந்தநல்லூர் ஒப்பனையம்மாள் சமேத பால்வண்ணநாத சுவாமி கோயிலில் புதிய ராஜகோபுர திருப்பணி தீவிரமாக நடந்து வருகிறது. பழம்பெருமை வாய்ந்த சரித்திர புகழ்மிக்க பல்வேறு சிறப்புகளை கொண்ட பால்வண்ணநாத சுவாமி கோயிலில் ராஜகோபுரம் இல்லாதது பக்தர்கள் மத்தியில் பெரும் குறையாக இருந்து வந்தது. இந்நிலையில் புதிய ராஜகோபுரம் கட்ட திருப்பணிக்குழு அமைக்கப்பட்டு உபயதாரர்களால் சுமார் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 9 நிலைகளுடன் கூடிய புதிய ராஜகோபுரம் கட்ட திட்டமிடப்பட்டது.அதன் அடிப்படையில் கடந்த 2007ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. 2008ம் ஆண்டு மே மாதம் 25ம் தேதி ராஜகோபுர கட்டுமான பணி துவக்க விழா நடந்தது. இதனை தொடர்ந்து திருப்பணிக்குழு தலைவர் ஆர்.வி.எஸ். துரைராஜ் மற்றும் திருப்பணி குழுவினர், உபயதாரர்கள் முயற்சியால் கோவில்பட்டி நேஷனல் இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் லட்சுமியம்மாள் பாலிடெக்னிக் சேர்மன் ராமசாமியின் ஒத்துழைப்புடன் மைசூர் மகாதேவர் கருங்கல் திருப்பணி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ராஜகோபுர திருப்பணி உட்பட பல்வேறு கோயில்களில் நிர்மான பணிகளை சிறப்பாக செய்த தென்காசி ஸ்தபதி விநாயகமூர்த்தி இக்கோயிலின் ராஜகோபுர நிர்மான பணியை துவக்கினார்.தற்போது 7 நிலைகள் கட்டுமான பணி நிறைவு பெற்றுள்ளது. 8வது நிலை கட்டுமான பணிக்கான கணபதி ஹோமத்தை கடந்த 19ம் தேதி காலை அர்ச்சகர்கள் பாலமுருகன், கணேசன் நடத்தினர். திருப்பணிக்குழு தலைவர் துரைராஜ், ஸ்தபதிகள் விநாயகமூர்த்தி, மாரியப்பன், 8வது நிலை உபயதாரர் ஐகோர்ட் வக்கீல் கதிர்வேல் துவக்கினர்.ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் முனியாண்டி, ஜானகிராமன், ஓய்வு பெற்ற விஏஓ பால்நாராயணன், சண்முகவேல், பெருமாள்பிள்ளை, வையாபுரி, ஹரிகரன்பிள்ளை, வர்த்தகர்கள் குமார், பால்வண்ணம், திருமலைக்குமாரசாமி, ஜெயராஜ், மெடிக்கல் கந்தன் மற்றும் முருகன், முருகேசன், பழனிச்சாமி தேவர், சேவுகடை குருசாமி, நாதகிரி முருகன், டிரைவர் ரவிச்சந்திரன், ரகுநாதன், திருநாவுக்கரசு, துரைபாண்டி, ராமர், முருகன், மேஸ்திரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரதோஷம் சிவபெருமானை வழிபட மிகவும் உகந்த புண்ணி காலமாகும். சிவன் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 
temple news
பல்லடம்; பருவாய் கிராமத்தில், 55வது ஆண்டாக வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்களை, ஊர் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை எஸ்.கரிசல்குளம் கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பங்குனி ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் அருகே வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது, இரண்டரை அடி உயர சிவலிங்க கற்சிலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar