Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெருமாள் கோவிலில் 13 கிலோ வெள்ளி ... கற்பகாம்பாளுக்கு தங்க அஷ்டோத்தர மாலை! கற்பகாம்பாளுக்கு தங்க அஷ்டோத்தர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆலங்குடி சுவாமிகளின் ஸ்ரீமத் பாகவத ஸப்தாஹ சதக்ரது!
எழுத்தின் அளவு:
ஆலங்குடி சுவாமிகளின் ஸ்ரீமத் பாகவத ஸப்தாஹ சதக்ரது!

பதிவு செய்த நாள்

18 மார்
2015
10:03

தஞ்சாவூர்: திருவாரூர் மாவட்டம், முடிகொண்டான், மேல அக்ரஹாரத்தில், ஆலங்குடி சுவாமிகளின் ஆராதனை விழாவை முன்னிட்டு, ஸ்ரீமத் பாகவத ஸப்தாஹ சதக்ரது நிகழ்ச்சி, நேற்று துவங்கியது.திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகா, ஆலங்குடியில், ஸ்வயம் ப்ரகாசானந்த சரஸ்வதி சுவாமிகள், 1806ம் ஆண்டு பிறந்தார். அவர், ஸ்ரீமத் பாகவதத்தை உபன்யாசம் செய்து வந்தார். பக்தர்கள், அவரை, ஆலங்குடி சுவாமிகள் என்று அழைத்தனர்.சுவாமிகள் மறைவுக்கு பின், கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் கனவில், ஆலங்குடி சுவாமிகள் தோன்றி, பாகவதத்தை உபன்யாசம் செய்யுமாறு அருளினார். இதையடுத்து, நன்னிலம் தாலுகாவுக்குட்பட்ட முடிகொண்டான், மேல அக்ரஹாரத்தில் மடம் உருவாக்கி, எட்டு ஆண்டுகளாக ஆராதனை விழா நடத்தப்படுகிறது. வரும், ஜூன், 1ம் தேதி, ஆலங்குடி சுவாமிகளின், 80வது ஆராதனை விழா நடக்க உள்ளது. இதை முன்னிட்டு, ஸ்ரீமத் பாகவத ஸப்தாஹ சதக்ரது நிகழ்ச்சி நேற்று துவங்கி உள்ளது.

நேற்று காலை, 5:30 மணிக்கு, கோ பூஜை நடந்தது. தொடர்ந்து, 6:30 மணிக்கு, ப்ருந்தாவன மஹாத்மிய பாராயணம், 8:00 மணிக்கு, ஸ்ரீமத் பாகவத மஹாத்மியம் நடந்தது. இன்று முதல், 23ம் தேதி வரை, ஸ்ரீமத் பாகவத மூலபாராயணம் நடக்கிறது. 23ம் தேதி பகல், 2:00 மணி முதல், 4:00 மணி வரை, மஹிளா மண்டலி ஸ்ரீபிரேமிகா சதகம் சங்கீர்த்தனம், மாலை, 4:00 மணி முதல், 6:00 மணி வரை உபன்யாசம் நடக்கிறது.இரவு, 6:30 மணி முதல் 7:30 மணி வரை, சந்த்யா ஹாரத்தி, இரவு, 7:30 முதல், 9:30 மணி வரை உபன்யாசம், 9:30 மணி முதல், 11:00 மணி வரை திவ்யநாம சங்கீர்த்தனம், டோலோத்சவம் நடக்கிறது. நிறைவு நாளன்று, காலை, 6:30 மணி முதல், 10:00 மணி வரை ஸப்தாஹ பாராயண பூர்த்தி அவப்ருத ஸ்நானம், 10:00 மணி முதல், 12:00 மணி வரை உபன்யாச பூர்த்தி நடக்கிறது. மேற்கண்ட உற்சவத்திற்கு உதவ, பங்கு பெற விரும்புவோர், ஸ்ரீஆலங்குடி சுவாமிகள் ஆராதனா சபா டிரஸ்ட் என்ற பெயருக்கு, டிமாண்ட் டிராப்ட்டோ, குறுக்குக் கோடிட்ட காசோலையோ அனுப்பலாம். அனுப்ப வேண்டிய முகவரி: எஸ்.சங்கரநாராயணன், செயலர், 6/63, (679), மேலத்தெரு, முடிகொண்டான் - 609 502. மொபைல் போன்: 97157 70855 என்ற எண்ணுக்கும், எஸ்.சுவாமிநாதன், மொபைல் போன்: 98402 14759 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, வீடு மற்றும் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விஷ்ணு ... மேலும்
 
temple news
ஆடிக்கிருத்திகை; திருத்தணி முருகன் கோவிலில் குவியும் பக்தர்கள்.. காவடிகளுடன் பரவசம்திருத்தணி; ... மேலும்
 
temple news
மாதான முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ ... மேலும்
 
temple news
கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார் இதனால், கிருஷ்ணஜெயந்தியன்று பால், தயிர், ... மேலும்
 
temple news
சிதம்பரம்; 79வது சுதந்திர தின விழாவையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவிலில், 152 அடி உயர ராஜகோபுரத்தில், பொது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar