Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் ... ஆத்தூர் கைலாசநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனூர் கோவிலில் அடிப்படை வசதிகள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2011
11:06

விழுப்புரம் : மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் மணிமேகலை தலைமை தாங்கினார். டி.ஆர். ஓ.,வெங்கடாஜலம், கோவில் உதவி ஆணையர் குமரதுரை முன்னிலை வகித்தனர். செஞ்சி தாசில்தார் வீரப்பன், நெடுஞ்சாலைத் துறை உதவி செயற் பொறியாளர் பெர்சிலின் செல்வராஜ், சுகாதாரத்துறை துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் சம்பத், அரசு போக்குவரத்துக் கழக உதவி மேலாளர் கோவிந்தராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலெக்டர் மணிமேகலை பேசியதாவது: மேல்மலையனூர் கோவிலில் இருந்து தற்காலிக பஸ் நிலையம் வரை மின் விளக்கு வசதியும், பல இடங்களில் சின்டெக்ஸ் டேங்க் வைத்து குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. கோவில் அருகிலுள்ள அக்னி குளத்தை சுற்றிலும் சுத்தம் செய்து சுற்றுச் சுவர் கட்ட திட்ட மதிப்பீடு தயார் செய்து சுற்றுலாத் துறை அனுமதிக்கு அனுப்பி வைத்துள்ளனர். அனுமதி கிடைத் ததும் பணிகள் துவக்கப்படும். அமாவாசையன்று பஸ்களை மாலை 4 மணிக்கு மேல் ஊரினுள் அனுமதிக்காமல் தற்காலிக பஸ் நிலையத்தில் நிறுத்த வேண்டும். மின்சார பிரச்னைகளை சரி செய்ய 20 பணியாளர்கள் தயார் நிலையில் இருப்பார்கள். கோவிலில் அடிப்படை வசதிகளை புதுப்பிக்கவும், கூடுதலாக அடிப்படை வசதிகளை செய்யவும் மாஸ்டர் பிளான் தயார் செய்து, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஒப்புதல் பெறப் பட்டுள்ளது. பணிகள் அனைத்தும் நிதி வசதிப்படி படிப்படியாக நிறைவேற்றப்படும். பாதுகாப்பு பணிகளை போலீசார் செய்து வருகின்றனர். அனுமதியின்றி வைக்கும் தற்காலிக கடைகள், ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் வளாகத்தில் மருத்துவக் குழு, தீயணைப்பு துறையினரும் தயார் நிலையில் இருப்பர். கோவிலில் 17.50 லட்சம் ரூபாயில் கட்டப்படும் கிழக்கு நுழைவு வாயில், 63.50 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்படும் மண்டபம் கட்டும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. கோவிலுக்கு வரும் பக்தர்கள் காவல் துறைக்கும், கோவில் நிர்வாகத்திற்கும் ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு கலெக்டர் மணிமேகலை பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலை கிரௌஞ்சமலை கனக்சௌரி கார்த்திக் சுவாமி கோயிலில் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் பிரம்மோற்சவ விழா முன்னிட்டு தங்க ரிஷப ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; வைகாசி உற்சவ விழா யொட்டி ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி, அம்மன் தீர்த்த குளத்தை சுற்றி வலம் ... மேலும்
 
temple news
திருப்பூர்: திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி, வீரராகவ பெருமாள் கோவில் வைகாசி விசாக தேர்த்திருவிழா, 13 ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவில், வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவில் நேற்று பஞ்சமூர்த்திகள் புறப்பாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar