பதிவு செய்த நாள்
20
மார்
2015
11:03
வால்பாறை: வால்பாறையில் நடந்த பிரதோஷ பூஜையில், சிறப்பு அலங்காரத்தில் காசி விஸ்வநாதர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் காசி விஸ்வநாதர் சன்னதி அமைந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் மாலை நடந்த பிரதோஷ பூஜையில் சிவலிங்கத்திற்கு சந்தனம், திருநீறு, இளநீர், பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட, 16 வகையான அபிஷேக பூஜைகள் நடந்தன. மாலை, 6.30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் காசி விஸ்வநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதன்பின், ரிஷபவாகனத்தில் சுவாமி,பார்வதி தேவியுடன் எழுந்தருளி கோவிலை வலம் வந்தார். பிரதோஷ பூஜையில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.