Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று தெலுங்கு புத்தாண்டு! மழை வேண்டி ஒப்பாரி: வினோத வருண பூஜை! மழை வேண்டி ஒப்பாரி: வினோத வருண பூஜை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் கோவிலில் பழங்கால நிலவறை கண்டுபிடிப்பு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கம் கோவிலில் பழங்கால நிலவறை கண்டுபிடிப்பு!

பதிவு செய்த நாள்

21 மார்
2015
10:03

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், பழங்கால நிலவறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், கும்பாபிஷேகத்திற்கு தயாராகி வருகிறது. கோவில் முழுவதும் சுத்தம் செய்தல் மற்றும் சீரமைப்பு பணி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை, ரங்க விலாஸ் மண்டபத்திற்கு இடது புறம் உள்ள வேணுகோபால சுவாமி சன்னிதி பகுதியை சுத்தம் செய்யும் பணி நடந்தது. அப்போது, சன்னிதியின் வலது புறம், மண் சுவரில் தன்வந்தரி ஓவியம் இருந்த இடத்தை தட்டிப் பார்த்தபோது, செங்கல் சுவர் அமைத்து மூடி இருந்தது தெரிய வந்தது. தொழிலாளர்கள், உடனே, கோவில் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

முதல் அறை: கோவில் இணை ஆணையர் ஜெயராமன், செயற்பொறியாளர் சிதம்பரம் உள்ளிட்ட, அதிகாரிகள் முன்னிலையில், சுவரை உடைத்து பார்த்தபோது, 20க்கு, நான்கரை அடியில், அறை ஒன்று இருந்தது. அறைக்குள் சென்று பார்த்தபோது, ஓரிடத்தில், இரண்டுக்கு, இரண்டு சதுர அடியில், கருங்கல்லால், ஒரு பகுதி மூடப்பட்டிருந்தது.

இரண்டாவது அறை: அதை நீக்கி பார்த்தபோது, கீழே, 8 அடி ஆழத்தில், 20க்கு, நான்கரை அடியில், ரகசிய அறை ஒன்று இருந்தது. இதை பார்த்து, அதிகாரிகளும், தொழிலாளர்களும் ஆச்சரியம் அடைந்தனர். இரு அறைகளிலும், எந்த பொருட்களும் கண்டெடுக்கப்படவில்லை. அங்கிருந்த மண் அகற்றப்பட்டு, அந்த அறை சுத்தம் செய்யப்பட்டது.

பழங்கால நிலவறை: இது குறித்து, கோவில் அலுவலர்கள் கூறியதாவது: தொல்லியல் துறையினர், ’உள்ளே, அறை இருக்கலாம்’ என கூறினர். அதனால், மண்சுவரை அகற்றி பார்த்தோம். உள்ளே, பழங்கால நிலவறை இருந்தது; வேறு எந்த பொருட்களும் இல்லை. வேணுகோபால சுவாமி சன்னிதிக்கும், அமிர்த கலச கருட சன்னிதிக்கும் இடையே, இந்த நிலவறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில், பயன்பாட்டில் இருந்த இந்த அறை, பின் பயன்பாடில்லாமல் மூடப்பட்டிருக்கலாம். இது குறித்து, சென்னையைச் சேர்ந்த தொல்லியல் துறை வல்லுனர் நரசிம்மன், ஆய்வு செய்து வருகிறார். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar